எஸ். சங்கர நாராயணன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எஸ்.ஷங்கர நாராயணன்

எஸ். சங்கர நாராயணன் (பிறப்பு: சூலை 28, 1959) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர்.[1] இவர் எஸ்.ஷங்கர நாராயணன் எனும் பெயரிலேயே எழுதி வருகிறார்.

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் எனும் தாமிரபரணி நதிக்கரை ஓரம் உள்ள ஊரில் பிறந்து சென்னையில் தொலைதொடர்புத் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் தமிழில் வெளியாகும் அனைத்து அச்சு இதழ்களிலும் சிறுகதைகள்,[2] நாவல்கள், குறுநாவல்கள், கவிதைகள் என்று நிறைய எழுதியிருக்கிறார்.

முதல் நாவல்

நந்தவனத்து பறவைகள் இவரது முதல் நாவலாகும்.[1] இதனை ஔவை நடராசன் வெளியிட்டார். இந்நூல் முதுகலை மாணவர்களுக்கு பாடமாக இணைக்கப்பட்டது.[1]

இவர் எழுதிய நூல்களில் “நீர்வலை” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

நாவல்கள்

  1. நந்தவனத்துப் பறவைகள்
  2. கிளிக்கூட்டம்
  3. மானுட சங்கமம்
  4. காலத்துளி
  5. கனவுகள் உறங்கட்டும்
  6. மற்றவர்கள்
  7. கிரண மழை
  8. கடல் காற்று
  9. நேற்று இன்றல்ல நாளை
  10. தொட்ட அலை தொடாத அலை
  11. முத்தயுத்தம்
  12. திசை ஒன்பது திசை பத்து
  13. கண்ணெறி தூரம்

குறுநாவல்கள்

  1. பூமிக்குத் தலை சுற்றுகிறது.
  2. விநாடியுகம்
  3. எஸ்.ஷங்கர நாராயணனின் குறுநாவல் வரிசை-1

சிறுகதைத் தொகுதிகள்

  1. அட்சரேகை தீர்க்கரேகை
  2. இறந்தகாலத்தின் சாம்பல்
  3. நிர்மலமான வானில் நட்சத்திரங்கள்
  4. காமதகனம்
  5. ஒரு துண்டு ஆகாயம்
  6. புதுவெள்ளம்
  7. சராசரி இந்தியன்
  8. கனவு தேசத்து அகதிகள்
  9. படகுத்துறை
  10. ஆயிரங் காலத்துப் பயிர்
  11. பெப்ருவரி-30
  12. உயிரைச் சேமித்து வைக்கிறேன்
  13. யுத்தம்
  14. இரத்த ஆறு
  15. இரண்டாயிரம் காலத்துப் பயிர்
  16. இருவர் எழுதிய கவிதை
  17. மௌனம் டாட் காம்
  18. பிளஸ்சீரோ - சீரோ - மைனஸ் சீரோ
  19. எஸ்.ஷங்கர நாராயணன் சிறுகதைகள்-1
  20. எஸ்.ஷங்கர நாராயணன் சிறுகதைகள்-2
  21. கதைப் பெருங்கொத்துக்கள்
  22. பிரசவறைக்கு வெளியே வலியுடன் ஆண்கள்
  23. பிரபஞ்ச பூதங்கள்
  24. லேப்டாப் குழந்தைகள்
  25. கடிகாரத்தை முந்துகிறேன்
  26. நதி நீராடல் (2014, அன்னை இராஜேஸ்வரி பதிப்பகம்)

கவிதைகள்

  1. கூறாதது கூறல்
  2. ஞானக் கோமாளி

திரட்டு நூல்கள்

  1. ஆகாயப் பந்தல்
  2. பரிவாரம்
  3. 1997 ன் சிறந்த சிறுகதைகள்
  4. 1998 ன் சிறந்த சிறுகதைகள்
  5. 1999 ன் சிறந்த சிறுகதைகள்
  6. யானைச் சவாரி
  7. மாமழை போற்றுதும்

பரிசுகள்-விருதுகள்

  1. தமிழக அரசு பரிசு
  2. அக்னி அட்சர விருது
  3. பாரத ஸ்டேட் வங்கி விருது
  4. திருப்பூர் தமிழ்சங்கப் பரிசு
  5. லில்லி தேவசிகாமணி விருது
  6. அனந்தாச்சாரி அறக்கட்டளை விருது
  7. இலக்கியச் சிந்தனை விருது
  8. இலக்கிய வீதி பரிசு

சிறப்புகள்

இவரது படைப்புகள் ஆங்கிலம், இந்தி, மலையாளம், குஜராத்தி மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இவருடைய ஒன்பது நூல்கள் தமிழ்நாட்டின் சில பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளில் நவீன இலக்கியப் பயில் நூல்களாக இடம் பெற்றிருக்கிறது.

ஆதாரங்கள்

  1. 1.0 1.1 1.2 "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - எஸ். ஷங்கரநாராயணன்". tamilonline.com. பார்க்கப்பட்ட நாள் 2 February 2019.
  2. டீம், விகடன். "சிறுகதை: "காட்டு மனிதர்களும் நாட்டு மிருகங்களும்" - எஸ். சங்கர நாராயணன்". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-04-15.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=எஸ்._சங்கர_நாராயணன்&oldid=3581" இருந்து மீள்விக்கப்பட்டது