எசு. பி. சேதுராமன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எசு. பி. சேதுராமன்
S. P. Sethuraman
Panayappan Sethuraman 2014 Basel.jpg
2014 ஆம் ஆண்டு பாசெல் சதுரங்க திருவிழாவில் சேதுராமன்.
முழுப் பெயர்சேதுராமன் பனையப்பன் சேதுராமன்
நாடுஇந்தியா
பிறப்பு1993 பிப்ரவரி 25
சென்னை,இந்தியா
பட்டம்கிராண்டு மாசுட்டர்
பிடே தரவுகோள்2613 (சூலை 2024)
உச்சத் தரவுகோள்2658 (மார்ச்சு 2016)

சேதுராமன் பனையப்பன் சேதுராமன் (Sethuraman Panayappan Sethuraman) ஓர் இந்திய சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 1993 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார் [1].

2009 ஆம் ஆண்டு புதுதில்லியில் நடைபெற்ற பார்சுவ்நாத் சதுரங்கப் போட்டியில் 8/10 புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடத்தை பகிர்ந்து கொண்ட போது கிராண்டு மாசுட்டர் தகுதி நிலைக்குத் தேவையான முதலாவது அடைவையும், 2010 ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற அனைத்துலக சதுரங்க சாம்பியன் பட்டப்போட்டியில் 6.5/9 புள்ளிகள் எடுத்து மூன்றாம் இடத்தை பிடித்த போது கிராண்டு மாசுட்டர் தகுதி நிலைக்குத் தேவையான இரண்டாவது அடைவையும், இதே ஆண்டில் போலாந்து நாட்டின் லெக்னிக்காவில் நடைபெற்ற வோல்வோடா கோப்பை சதுரங்கப் போட்டியில் 7/9 புள்ளிகள் எடுத்த வெற்றி பெற்ற போது கிராண்டு மாசுட்டர் தகுதி நிலைக்குத் தேவையான மூன்றாவது அடைவையும் ஈட்டினார் [1].

சிங்கப்பூரில் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியையும் [2], துருக்கியின் அண்டால்யாவில் நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்டோர் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியையும் சேதுராமன் வென்றார்.

நார்வேயில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற 41 ஆவது சதுரங்க ஒலிம்பிக்கில் இந்தியக் குழுவிற்கு வெண்கலப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார். மேலும், இந்திய தேசிய முதல்நிலை சதுரங்க சாம்பியன் பட்டத்தையும் வென்றார்[3]. இப்போட்டியின் முதல் சுற்றில் உருசிய கிராண்டு மாசுட்டர் சனான் சுயுகிரோவ்வையும் இரண்டாவது சுற்றில் சகநாட்டு கிராண்டு மாசுட்டர் பென்டலா அரிகிருட்டிணனையும் வீழ்த்தினார்[4]. மூன்றாவது சுற்றில் சாக்கிரியர் மாமேத்யாரோவிடம் விழ்ந்தார்.

2016 ஆம் ஆண்டு உசுபெக்கித்தான் நாட்டின் தாசுகண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய சதுரங்க சாம்பியன் பட்டத்தை வென்றார்[5]. 2018 பிப்ரவரியில் நடைபெற்ற ஏரோபிளாட்டு சதுரங்கப் போட்டியில் 6.5/9 புள்ளிகள் எடுத்து[6] விளையாடிய 92 நபர்களில்[7] சேதுராமன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=எசு._பி._சேதுராமன்&oldid=25692" இருந்து மீள்விக்கப்பட்டது