ஈரோடு கோட்டை
ஈரோடு கோட்டை | |
---|---|
பகுதி: தமிழ்நாடு | |
ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா | |
வகை | கோட்டைகள் |
இடத் தகவல் | |
கட்டுப்படுத்துவது | தமிழ்நாடு அரசு |
நிலைமை | அழிபாடு |
இட வரலாறு | |
கட்டியவர் | சந்திரமதி முதலியார்[1] |
கட்டிடப் பொருள் |
மண் |
ஈரோடு கோட்டை (Erode Fort) என்பது ஈரோட்டில் இருந்த ஒரு கோட்டை ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருந்தது. 1800ஆம் ஆண்டில் பயணியும் வரலாற்றாளருமான பிரான்சிசு புக்கானன் என்பவர் எழுதிய குறிப்பின்படி, இது ஒரு பெரிய மண் கோட்டையாக இருந்தது. இங்கே ஒரு படைப்பிரிவு வீரர்கள் இருந்ததாகவும், இப்பகுதியில் படைக்குப் போதிய அளவில் ஆட்களைத் திரட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தளபதி மீடோசு படையெடுத்து வந்த காலத்தில் இக்கோட்டை ஏறத்தாழ முற்றாகவே அழிந்து விட்டது.[2] பிறகு, மக்களின் நிவாரணப்பணிக்காக அழிவுற்ற மண்கோட்டையினை சீர் செய்து, சுற்றியிருந்த அகழியையும் நிரப்பினார்கள். முன்பு அகழியிருந்த பகுதியே தற்பொழுது அகழிமேடு என்று அழைக்கப்படுகிறது.
ஆனால் தற்போதும் கோட்டை என்ற பெயர் வழக்கில் உள்ளது. ஈரோட்டில் உள்ள மணிக்கூண்டிற்கு மேற்கே, அகழிமேடு வரை உள்ள பகுதியை 'கோட்டை' என்றும், மணிக்கூண்டிற்குக் கிழக்கே காலிங்கராயன் கால்வாய் வரை உள்ள பகுதியை 'பேட்டை' என்றும் அழைத்து வருகின்றனர்.
இந்தக் கோட்டையையும், பேட்டையையும் உள்ளடக்கி அமையப் பெற்றதே ஈரோட்டின் பழைய நகராட்சிப் பகுதியாகும். அதுவே தற்போதைய ஈரோட்டின் வர்த்தக மையமாகவும் திகழ்கிறது.
மேற்கோள்கள்
- ↑ செங்குந்த மித்திரன், பக்கம் 76, ஈரோட்டில் கோட்டை கட்டி ஆட்சி செய்த மன்னர்
- ↑ "Erode Fort". The Hindu (Chennai, India). 18 January 2009 இம் மூலத்தில் இருந்து 23 ஜனவரி 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120123024247/http://www.hindu.com/2009/01/18/stories/2009011854990500.htm.
வார்ப்புரு:தமிழகக் கோட்டைகள் வார்ப்புரு:இந்தியாவிலுள்ள கோட்டைகள்