ஈச்சனாரி விநாயகர் கோவில்
Jump to navigation
Jump to search
ஈச்சனாரி விநாயகர் கோயில் | |
---|---|
ஈச்சனாரி விநாயகர் கோயிலின் தோற்றம் | |
ஆள்கூறுகள்: | 10°55′26.4″N 76°58′56.9″E / 10.924000°N 76.982472°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
அமைவு: | கோயம்புத்தூர் மாவட்டம் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பிள்ளையார் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | Dravidian |
இணையதளம்: | www.eachanarivinayagar.tnhrce.in |
ஈச்சனாரி விநாயகர் கோயில் (Eachanari Vinayagar Temple) தமிழ்நாட்டில் கோயம்புத்தூரருகே ஈச்சனாரியில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இக்கோயிலின் முதன்மைக் கடவுள் பிள்ளையார் ஆவார். கோயம்புத்தூரிலிருந்து பொள்ளாச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் (சாலை எண் 209 - பழைய எண்ணிடல்) கிட்டத்தட்ட 10 கிமீ தொலைவில் இக்கோயில் உள்ளது.[1]
வரலாறு
5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட இக்கோயிலின் பிள்ளையார் சிலை பேரூர் பட்டீசுவரர் கோயிலில் வைப்பதற்காக மதுரையிலிருந்து வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது இவ்விடத்தில் வண்டியின் அச்சு முறிந்து போனதாகவும், சிலையையும் அங்கிருந்து நகர்த்த முடியவில்லை என்பதாலும், அதே இடத்தில் அத்திருவுருவத்திற்கு கோயில் அமைக்கப்பட்டதாக, மரபு வரலாறு கூறுகிறது.[2]
மேற்கோள்கள்
- ↑ "About us, Eachanari Vinayagar Temple". Government of Tamil Nadu. Archived from the original on 9 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 9 March 2016.
- ↑ "Eachanari Vinayagar Temple" (in Tamil). தினமலர். பார்க்கப்பட்ட நாள் 9 March 2016.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)