இலங்கைச் சரித்திர சூசனம்
Jump to navigation
Jump to search
இலங்கைச் சரித்திர சூசனம் என்பது ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களால் எழுதி 1883 இல் வெளியிடப்பட்ட இலங்கை வரலாற்று நூல் ஆகும். இலங்கை பிரித்தானியப் பேரரசிடம் இருந்து சுதந்திரம் அடைய முன்பு தமிழரால் தமிழில் எழுதப்பட்ட ஒரு வரலாற்று, அரசியல் முக்கியத்துவம் உடைய ஒரு ஆவணம் ஆகும். "பூவுலகத்திலே யாவருந் தத்தந் தேச சரித்திரங்களை யுணர்ந்து, தமது முன்னோர் நிலையையும் செயலையும், நாகரீகத்தையும் ஒருபால் நோக்கித், தமது நிலையையும் செயலையும் நாகரிகத்தையும் மற்றொருபால் நோக்குதல் அத்தியாவசியகமாம்." என்று முகவுரையில் கூறி இந்த நூல் விரிகிறது.