இரங்கச்சாரி மாதவன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இரங்கச்சாரி மாதவன்
Rangachari Madhavan
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு29 அக்டோபர் 1960 (1960-10-29) (அகவை 63)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மட்டையாட்ட நடைஇடது கை
பந்துவீச்சு நடைஇடது-கை வழமைச் சுழல்
பங்குபன்முக வீரர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1982/83–1989/90தமிழ்நாடு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் தரம் பட்டியல் அ
ஆட்டங்கள் 39 5
ஓட்டங்கள் 1,781 58
மட்டையாட்ட சராசரி 34.92 14.50
100கள்/50கள் 5/9 0/0
அதியுயர் ஓட்டம் 153* 21*
வீசிய பந்துகள் 1,351 72
வீழ்த்தல்கள் 26 1
பந்துவீச்சு சராசரி 25.50 48.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 5/32 1/37
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
24/– 2/–
மூலம்: ESPNcricinfo, 17 மே 2016

இரங்கச்சாரி மாதவன் (Rangachari Madhavan) என்பவர் இந்திய நாட்டின் முன்னாள் முதல்தர துடுப்பாட்ட வீரராவார். இவர் 29 அக்டோபர் 1960 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதியன்று பிறந்தார். முதல்தரப் போட்டிகளில் இவர் தமிழ்நாட்டுக்காக விளையாடினார்.

வாழ்க்கை குறிப்பு

சென்னையில் பிறந்து வளர்ந்த மாதவன் துடுப்பாட்டத்தில் மட்டையாளராகவும் பந்துவீச்சாளராகவும் விளையாடினார். இடது கை மட்டையாளராகவும் இடதுகை மெதுவாக இடது கை மரபுவழா பந்துவீச்சாளராகவும் பந்துகளை வீசும் திறன் பெற்றிருந்தார். அகவை 19 உட்பட்டோர் போட்டிகளில் தேர்வானதற்கு முன்னர் 39 முதல் தர ஆட்டங்களிலும் 5 பட்டியல் அ ஆட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். 1989/90 காலங்களில் இவர் தனது கடைசி முதல்தர மட்டைபந்து ஆட்டத்தை ஆடியுள்ளார். அப்போது அவரது அகவை 29.[1]

மாதவன் தொழில் ரீதியாக பட்டயக் கணக்காளராக இருந்தார். பத்து வருடங்கள் மத்திய கிழக்கில் வாழ்ந்த இவர் 2000 ஆம் ஆண்டுகளின் மத்தியில் சென்னை திரும்பினார். தமிழகத்தின் 19 வயதுக்குட்பட்ட தேர்வுக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் மூத்த அணி தேர்வுக் குழுவில் உறுப்பினரானார். அதன் பிறகு இவர் அதன் தலைவராகவும் ஆனார்.[2]

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=இரங்கச்சாரி_மாதவன்&oldid=27619" இருந்து மீள்விக்கப்பட்டது