இனிது இனிது (2010 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இனிது இனிது
இயக்கம்கே. வி. குகன்
தயாரிப்புபிரகாஷ் ராஜ்
கதைகே. வி. குகன்
மூலக்கதை
  • ஹப்பி டேய்ஸ்
  • By
  • சேகர் கம்முலா
இசைமைக்கி ஜே மேயர்
நடிப்பு
  • நாராயண் லக்கி
  • சர்ரண் குமார்
  • அதித் அருண்
  • நிக்கில் சித்தார்த்
  • சோனியா தீப்தி
  • ரேஷ்மி மேனன்
  • அஞ்சலா சவேரி
  • பேனாஸ்
  • ஜியா உமர்
  • சன்னி சவ்ரவ்
  • அபிஷேக்
  • கிருஷ்ணா
  • அஜய்
  • சதீஷ்
  • பிரசாத்
ஒளிப்பதிவுகே. வி. குகன்
படத்தொகுப்புடான் மேக்ஸ்
கலையகம்டூயட் மூவிஸ்
வெளியீடுஆகத்து 20, 2010 (2010-08-20)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இனிது இனிது (Inidhu Inidhu) 2010 ல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. குகன் இத்திரைப்படத்தில் இணை எழுத்தாளராவும், ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். இத்திரைப்படத்தில் எட்டு புதிய அறிமுக நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 2007 ல் தெலுங்கில் வெளியாகி பல விருதுகளைக் குவித்த ஹப்பி டேய்ஸ் படத்தின் மீள்உருவாக்கமாகும். இத்திரைப்படத்தை பிரகாஷ் ராஜ் [1] தயாரித்திருந்தார்.இப்படம் 20/ஆகஸ்டு/2010 இல் வெளியாகியிருந்தது. இத்திரைப்படத்தின் பெருமளவு படப்பிடிப்பு இந்தியாவின் VIT பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கதைச்சுருக்கம்.

இனிது இனிது திரைப்படம் ஒரு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலவரும் மாணவர்கள் பற்றியது. சித்து (அதித்), அரவிந்த் அலய்ஸ் ரைஸ்சன் (நாராயண்), விமல் (விமல்), சங்கர் (சரவண்), மது (ரேஷ்மி), அபர்ணா (அப்பு) மற்றும் ஜியா ஆகியோர் முதலாம் வருட மாணவர்களாக பல்கலைக்கழகத்தில் சேர்வதுடன் கதை ஆரம்பிக்கிறது. அங்கு அவர்கள் சிரேஷ்ட மாணவர்களால் எதிர்நோக்கும் பகிடிவதைகள் அதனால் அவர்களுக்குள் ஏற்படும் ஒற்றுமை என கதை அசத்தலாக நகர்ந்தது போக சித்து மதுவின் மீதும், ரைசன் சிரவந்தி (சிரவசு) மீதும் காதல் கொள்கின்றனர். நான்கு வருட படிப்பு காலத்தில் அவர்களுக்குள் ஏற்படும் மோதல்கள், புரிந்துணர்வுகள் என பட்டமளிப்பு வரை சென்று முடிகிறது கதை.

நடிகர்கள்

நாராயண்-அரவிந்த்  (ரைசன்)

அதித் அருண்-சித்தார்த் (சித்து)

சரண் குமார்-சங்கர்

விமல்-விமல்

சோனியா தீப்தி-ஸ்ரவந்தி (ஸ்ரவ்ஸ்)

ரேஷ்மி மேனன்-மதுபாலா (மது)

பேனாஸ்-அபர்ணா (அப்பு)

ஜியா உமர்-சங்கீதா

அஞ்சலா சாவேரா-ஸ்ரேயா மேடம் (சிறப்பு தோற்றம்)

சன் சோ - சன்னி பல்போவா

கிருஷ்ணா-சஞ்சய்

அபிராம் - அர்ஜுன்

அஜய்-அஜய்

சதீஷ்-சதீஷ்  (சிறப்பு தோற்றம் )

அபிசேக் வினோத் கல்லூரியின் மூத்த மாணவர்

இசை

இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் மைக்கி ஜே மேயர் ஆவார். இத்திரைப்படத்தின் இசை சோனி மியுசிக் [2] இந்தியாவினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன் இசைவெளியீடு 1ம் திகதி ஆகஸ்டு மாதம் 2010 இல் பிரகாஷ் ராஜினால் வெளியிடப்பட்டது.[3]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்