ஆசி. கந்தராஜா
Jump to navigation
Jump to search
ஆசி. கந்தராஜா | |
---|---|
முழுப்பெயர் | ஆறுமுகம் சின்னத்தம்பி கந்தராஜா |
பிறப்பு | கைதடி |
தேசியம் | இலங்கைத் தமிழர், ஆத்திரேலியர் |
அறியப்படுவது | பேராசிரியர் ஈழத்து எழுத்தாளர் |
கல்வி | முதுகலை (செருமனி), கலாநிதி / முனைவர் பட்டம் (செருமனி), MIASc. (ஆத்திரேலியா) Post Doc. (யப்பான்) |
பணி | பேராசிரியர் |
பெற்றோர் | ஆ. சின்னத்தம்பி, முத்துப்பிள்ளை |
வாழ்க்கைத் துணை |
சத்தியபாமா |
ஆசி கந்தராஜா அவுத்திரேலிய-ஈழத்து எழுத்தாளர், கல்வியாளர். பூங்கனியியல், உயிரியல் தொழிநுட்பத்துறைப் பேராசிரியர். செருமனி, யப்பான் மற்றும் அவுத்திரேலியப் பல்கலைக்கழகங்களில் படித்தவர். பணிபுரிந்தவர்.
வாழ்க்கைக் குறிப்பு
ஆசி கந்தராஜா யாழ்ப்பாணத்திலுள்ள கைதடி கிராமத்தில் பிறந்தார். தந்தை ஆறுமுகம் சின்னத்தம்பி புராண இதிகாசங்களை முறைப்படி கற்றுத் தேர்ந்த ஒரு தமிழ் ஆசான் ஆவார். கிழக்கு செருமனி அரசின் புலமைப் பரிசில் பெற்று 1974ஆம் ஆண்டு உயர் கல்வி கற்கச் சென்ற ஆசி. கந்தராஜா, பின்னர் மேற்கு செருமனியிலும் புலமைப் பரிசில் பெற்று கிழக்கிலும் மேற்கிலுமாக மொத்தம் 13 ஆண்டுகள் படித்தவர் பணிபுரிந்தவர். 1987 தொடக்கம் புலம் பெயர்ந்து அவுத்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றார்.
வெளிவந்த நூல்கள்
- பாவனை பேசலன்றி (சிறுகதைத் தொகுப்பு - மித்ர வெளியீடு 2000)
- தமிழ் முழங்கும் வேளையிலே (செவ்விகளின் தொகுப்பு - மித்ர வெளியீடு 2000, சிட்னியில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சிக்காக இவர் கண்ட 18 பேட்டிகள்)
- உயரப்பறக்கும் காகங்கள் (சிறுகதைத் தொகுப்பு - மித்ர வெளியீடு 2003)
- Horizon (மித்ர பதிப்பகம், 2007, சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு)
- கீதையடி நீயெனக்கு... (குறுநாவல் தொகுப்பு, மித்ர வெளியீடு (2014),
- கறுத்தக் கொழும்பான். (புனைவுக் கட்டுரை தொகுப்பு, மித்ர வெளியீடு (2014),]
- செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய். (புனைவுக் கட்டுரை தொகுப்பு. ஞானம் வெளியீடு (2017),
- கள்ளக்கணக்கு (சிறுகதைத் தொகுப்பு, காலச்சுவடு வெளியீடு (2018), )
- ஹெய்க்கோ (சிறுகதைகளின் சிங்கள மொழிபெயர்ப்பு. 'கொடகே' பதிப்பகம் (2019), )
- பணச்சடங்கு (சிறுகதைத் தொகுப்பு, "எங்கட புத்தகங்கள்" வெளியீடு யாழ்ப்பாணம் (2021), ISBN 978-624-97823-1-0)
- மண் அளக்கும் சொல் (புனைவுக்கட்டுரைகள், காலச்சுவடு வெளியீடு (2022), ISBN 978-93-5523-057-7)
- அகதியின் பேர்ளின் வாசல் (நாவல் - வரலாற்றுப் புதினம், "எங்கட புத்தகங்கள்" வெளியீடு யாழ்ப்பாணம் (2023), ISBN 9786249782365)
பரிசுகளும் விருதுகளும்
- இலங்கை அரச சாகித்திய விருது (2001), பாவனை பேசலன்றி - சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கு.
- இந்திய சாகித்திய அகாதெமி பதிப்பித்து வெளிவந்துள்ள 'கண்களுக்கு அப்பால். இதயத்திற்கு அருகில்...' என்னும் சிறுகதைத் தொகுப்பில் (2015) இவரது சிறுகதை இடம்பெற்றுள்ளது.
- திருப்பூர் இலக்கியவிருது 2016 ‘கறுத்தக்கொழும்பான் புனைவுக் கட்டுரைத் தொகுதிக்கு
- தமிழியல் விருது 2015. கறுத்தக் கொழும்பான் நூலுக்கு...! வித்தியாகீர்த்தி ந. சந்திரகுமார் தமிழியல் விருது.
- திருப்பூர் தமிழ்ச்சங்க விருது 2015. கீதையடி நீயெனக்கு... குறுநாவல் தொகுதிக்கு. மித்ர பதிப்பகம்
- திருப்பூர் தமிழ்ச்சங்க இலக்கிய விருதும் பரிசும் 2018. கள்ளக்கணக்கு சிறுகதைத் தொகுப்புக்கு. காலச்சுவடு வெளியீடு (2018)
- திருப்பூர் இலக்கியவிருது 2019. படைப்பிலக்கியம்.
- இலங்கை அரச சாகித்திய விருது (2022), பணச்சடங்கு - சிறுகதைத் தொகுப்புக்கு
- பேராசிரியர் நந்தி சிவஞானசுந்தரம் ஞாபகார்த்தமாக, பாரிசில் (Paris) பன்முக தமிழ் ஆளுமைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது, வென்மேரி அறக்கட்டளை (Venmary Trust). 6 August 2023.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
[நூலகம்]