அரூனா ரோய்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அருணா ராய்
Aruna Roy (2019).jpg
பிறப்புமே 26, 1946 (1946-05-26) (அகவை 78)
சென்னை
பணிசமூக செயற்பாட்டாளர்

அரூனா ரோய் (Aruna Roy, பிறப்பு 26 மே 1946) ஒர் இந்திய அரசியல் சமூக செயற்பாட்டாளர். இவர் தொழிலாளர்கள் உழவர்கள் ஒற்றுமைப் பலம் (Mazdoor Kisan Shakti Sangathana) என்ற அமைப்பின் அமைப்பாளர். இவர் தகவல் அறியும் உரிமைக்கான இயக்கத்துக்காகவும் அறியப்படுகிறார்.[1] தேசியப் பரிந்துரை அவையின் உறுப்பினராகவும் விளங்கினார்.[2]

2000ஆம் ஆண்டில் சமூகத் தலைமைத் திறனுக்காக ரமன் மக்சேசே விருது பெற்றார்.[3] 2010ஆம் ஆண்டு பொதுத்துறை நிர்வாகம்,கல்வி மற்றும் மேலாண்மையில் சீர்மைக்கான லால் பகதூர் சாத்திரி தேசிய விருதினைப் பெற்றார்.[4]

2011ஆம் ஆண்டு ஆகத்து மாதம் அன்னா அசாரே நிகழ்த்திய ஜன் லோக்பால் மசோதாவிற்கான போராட்டத்தின்போது அரசு நிலைக்கும் அன்னா குழுவினரின் நெகிழ்வற்ற நிலைக்கும் இடைப்பட்ட உரையாடி தீர்வு காணக்கூடிய நிலையை பரிந்துரைத்து ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தார்[[5].இதனால் தகவல் உரிமை சட்டப் போராட்டத்தில் இணைந்திருந்த அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கருத்து வேற்றுமை கொண்டார்[6] .

பிறப்பும் கல்வியும்

அருணா மே 26, 1946ஆம் ஆண்டு சென்னையில் ஹேமா மற்றும் எலுபை துரைசாமி ஜெயராம் தம்பதிகளுக்குப் பிறந்தவர். இவரது பெற்றோர் தமிழ் பிராமணக் குடும்பத்தினராக இருந்தபோதும் முற்போக்கு கருத்துக்கள் கொண்டிருந்தனர். தந்தை ஜெயராம் விடுதலைக்குப் பிறகு இந்திய அரசு அதிகாரியாக பணியாற்றியவர். அரசுப் பணி காரணமாக தில்லியில் வாழ்ந்தபோதும் அருணா சென்னையில் கத்தோலிக்க மடாலய பள்ளி ஒன்றில் படித்தார் பின்னர் கலாசேத்திராவில் இரண்டாண்டுகள் பரத நாட்டியம் மற்றும் கர்நாடக இசை பயின்றார். அதன் பின்னர் புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்திலும் தில்லியில் உள்ள பாரதிய வித்யா பவனிலும் கல்வி பயின்றுள்ளார்.[7]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=அரூனா_ரோய்&oldid=10234" இருந்து மீள்விக்கப்பட்டது