அருசோ
அருசோ (in English Aruso) என்கிற அரு.சோமசுந்தரன் தமிழக அரசின் பொற்கிழி விருது பெற்றவர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.
காசிஸ்ரீ | |
இயற்பெயர்/ அறியும் பெயர் |
அருசோ |
பிறந்ததிகதி | 01.08.1936 |
பிறந்தஇடம் | புதுவயல் , சிவகங்கை மாவட்டம் |
இறப்பு | 30.12.2023[1] |
பணி | பேச்சாளர், எழுத்தாளர் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | பொற்கிழிக் கவிஞர் விருது |
வாழ்க்கை வரலாறு
சிவகங்கை மாவட்டம் புதுவயலில் பிறந்தவர். 15,000க்கும் மேற்பட்ட கவிதைகளையும் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை படைத்துள்ளார். கவிதை, கட்டுரை, இலக்கிய திறனாய்வு, நாடகம், மொழிபெயர்ப்பு, பயணம், ஆன்மீகம் என்று பலதுறைகளில் வல்லுனர்.[2][3]
காசி பாதயாத்திரை
1983ஆம் ஆண்டு அருசோ, தன்னுடன் 13பேர் கொண்ட குழுவை கூட்டிக் கொண்டு இராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு பாதயாத்திரையாக நடந்து சென்று கடந்த நூற்றாண்டில் மாபெரும் ஆன்மீக சாதனை நிகழ்த்தி, காசி விஸ்வநாதர் கோயிலில் உத்திரபிரதேச அரசு வழங்கும் "காசிஸ்ரீ" பட்டத்தை முதன்முதலில் பெற்ற தமிழர் ஆவார்.[4] [2]
முதல் பொற்கிழிக் கவிஞர்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தமிழக அரசின் சார்பில் நடத்தப்பெற்ற பொற்கிழிக் காவியப் போட்டியில் முதல் பரிசுபெற்று, முதற்பொற்கிழிக் கவிஞர் விருதை அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியிடம் பெற்றார்.[2]
விருதுகள்
கவிக்கோ, பல்துறைச் செந்நாப் பாவலர் மற்றும் தங்கப் பதக்கம் ஆகியவற்றை தவத்திரு குன்றக்குடி அடிகளாரிடம் பெற்றவர்.[2]
மேற்கோள்கள்
- ↑ தினமலர்: அரு.சோமசுந்தரன் கண் தானம்://m.dinamalar.com/paytm/detail.php?id=3517111
- ↑ 2.0 2.1 2.2 2.3 பொற்கிழிக்கவிஞர் அருசோ (2003). இராமாயணம். பொன்முடி பதிப்பகம், காரைக்குடி. பக். ஆசிரியர் குறிப்பு.
- ↑ தினமலர்: அரு.சோமசுந்தரன் கண் தானம்://m.dinamalar.com/paytm/detail.php?id=3517111
- ↑ நான் கண்ட காசி. 1992.