அரிசமய தீபம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அரிசமய தீபம் என்பது 18 ம் நூற்றாண்டில் விருத்தப் பாக்களால் எழுதப்பட்ட ஒரு தமிழ் இலக்கிய நூல் ஆகும். இந்த நூல் வைணவ சமய அடியார்களாகிய ஆழ்வார்கள், ஆசாரியர்கள் ஆகியோரின் வரலாற்றைக் கூறுகிறது. இந்த நூலை கீழையூர்ச் சடகோபதாசர் என்ற புலவர் இயற்றினார். இது பதினான்கு சருக்கங்களைக் கொண்டுள்ளது. அவை பின்வருமாற

  • பரமபதச் சருக்கம்
  • ஆதி யோகிச் சருக்கம்
  • பத்தி சாரச் சருக்கம்
  • பராங்குசச் சருக்கம்
  • குலசேகரச் சருக்கம்
  • பதுமைச் சருக்கம்
  • முனிவாகனச் சருக்கம்
  • விப்பரநாராயணச் சருக்கம்
  • பட்டநாதச் சருக்கம்
  • கோதைச் சருக்கம்
  • பரகாலச் சருக்கம்
  • நாதமுனிச் சருக்கம்
  • யாமுநச் சருக்கம்
  • இராமானுசச் சருக்கம்
"https://tamilar.wiki/index.php?title=அரிசமய_தீபம்&oldid=17117" இருந்து மீள்விக்கப்பட்டது