அம்மை (நூல்வனப்பு)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அம்மை என்பது நூலின் வனப்பு இயல்புகள் எட்டில் ஒன்று. அம்மை வனப்பியல் நூலானது சில மெல்லிய சொற்களைக் கொண்டிருக்கும்.[1] அம்மை என்பது குணப்பெயர். அது அமைதிப்பாட்டு [2] நின்றமையின் 'அம்மை' என்று ஆயிற்று என்பது பேராசிரியர் இதற்குத் தரும் விளக்கம். திருக்குறள் அம்மை-வனப்பு கொண்ட நூல் எனத் தொல்காப்பிய உரையாசிரியர்கள் காட்டுகின்றனர்.

அம்மை வனப்பு
அறிவினான் ஆகுவ(து) உண்டோ பிறிதின்நோய்
தன்நோய்போல் போற்றாக் கடை - திருக்குறள்
அறம் செய விரும்பு - ஔவையார் ஆத்திசூடி

அடிக்குறிப்புகள்

  1. சின்மென் மொழியால் தாஅய பனுவலின்
    அம்மை தானே அடிநிபிர்பு இன்றே - தொல்காப்பியம் செய்யுளியல் 227
  2. அமைந்திருக்கும் பாங்கு
"https://tamilar.wiki/index.php?title=அம்மை_(நூல்வனப்பு)&oldid=20353" இருந்து மீள்விக்கப்பட்டது