அமித் பார்கவ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அமித் பார்கவ்
பிறப்புபெங்களூர், கருநாடகம், இந்தியா இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர், தொலைக்காட்சி நடிகர், பின்னணிக் குரல் கொடுப்பவர்
செயற்பாட்டுக்
காலம்
2014- தற்போது வரை

அமித் பார்கவ் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். தமிழ், கன்னடம், இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். கன்னடத்தில் ஒளிபரப்பான சீதை தொலைக்காட்சித் தொடரில் ஏற்ற இராமர் வேடத்தின் வாயிலாக புகழ்பெற்றார்.[1] அபிசேக் வர்மன் இயக்கிய2 ஸ்டேட்ஸ் திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். கல்யாணம் முதல் காதல் வரை தொலைக்காட்சித் தொடரில் அர்ஜுன் என்ற வேடத்தில் நடித்துள்ளார். தமிழில், என்னை அறிந்தால் (2015), மிருதன் (2016) உள்ளிட்ட திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், கன்னட மொழித் திரைப்படங்களில் பின்னணிக் குரல் கொடுப்பவராகவும் பணியாற்றியுள்ளார்.


தொலைக்காட்சித் தொடர்கள்

ஆண்டு தொடர் கதாபாத்திரம் மொழி தொலைக்காட்சி குறிப்புகள்
2010 சீதை இராமர் கன்னடம் உதயா தொலைக்காட்சி
2013 மகாபாரதம் கண்ணன் தமிழ் சன் தொலைக்காட்சி
2014 பிக் பாஸ் கன்னடம் 2 குரல் மட்டும் கன்னடம் ஏசியாநெட் சுவர்ணா
2014–2017 கல்யாணம் முதல் காதல் வரை அர்ச்சுன் தமிழ் ஸ்டார் விஜய்
2017 மாப்பிள்ளை தீபக் தமிழ் விஜய்
2017- தற்போது நெஞ்சம் மறப்பதில்லை விக்ரம் தமிழ் விஜய்

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
2014 விழி மூடி யோசித்தால் தமிழ்
2014 2 ஸ்டேட்ஸ் கரீசு இந்தி
2014 என்னமோ ஏதோ மருத்துவர் ஆனந்த் தமிழ்
2015 என்னை அறிந்தால் தேன்மொழியின் வருங்கால கணவன் தமிழ்
2016 மிருதன் நவீன் தமிழ்
2017 குற்றம் 23 அரவிந்த் தமிழ்
2018 கர்ஜனை தமிழ் படப்பிடிப்பில்

மேற்கோள்கள்

  1. "Act of faith". தி இந்து. 12 February 2013. பார்க்கப்பட்ட நாள் 29 October 2014.
"https://tamilar.wiki/index.php?title=அமித்_பார்கவ்&oldid=21398" இருந்து மீள்விக்கப்பட்டது