அபிராமி அம்மைப் பதிகம்
Jump to navigation
Jump to search
அபிராமி அம்மைப் பதிகம் என்னும் நூல் அபிராமி அந்தாதி அருளிய அபிராமி பட்டர் (இயற்பெயர்: சுப்ரமணிய ஐயர்) இயற்றியது. இந்நூலில் அபிராமித்தாயைப் போற்றி இரு பதிகங்கள் உள்ளன[1].
முதலாவது பதிகம்
காப்பு
- தூயதமிழ்ப் பாமாலை சூட்டுதற்கு மும்மதம், நால்வாய்,
- ஐங்கரன்தாள் வழுத்துவாம் - நேயர்நிதம்
- எண்ணும் புகழ்க்கடவூர் எங்கள்அபி ராமவல்லி
- நண்ணும்பொற் பாதத்தில் நன்கு!
பதிகம்
இப்பதிகத்தில் மொத்தம் 11 பாடல்கள் பதினாறுசீர்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்|ஆசிரிய விருத்தத்தால் பாடபெற்றுள்ளது.
இரண்டாவது பதிகம்
இவ்விரண்டாவது பதிகத்திலும் 11 பாடல்கள் பதினான்குசீர்கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தால் பாடபெற்றுள்ளன.
எடுத்துக்காட்டு செய்யுள்
- மிகையும் துரத்த, வெம்பிணி யும்துரத்த,
- வெகுளி ஆனதும் துரத்த,
- மிடியும் துரத்த, நைரதிரை யும்துரத்த,
- மிகுவேத னைகளும் துரத்தப்,
- பைகயும் துரத்த, வஞ்சைனயும் துரத்தப்,
- பசியென்பதும் துரத்தப்,
- பாவம் துரத்தப், பதிமோகம் துரத்தப்,
- பலகா யமும்துரத்த,
- நைகயும் துரத்த, ஊழ்வினையும் துரத்தஎன்
- நாளும் துரத்த, வெகுவாய்
- நாவறண்டு ஓடிக்கால் தளர்ந்திடும் என்னை
- நமனும் துரத்து வானோ?
- அகில உலகங்கட்கும் ஆதார தெய்வமே!
- ஆதி கடவூரின் வாழ்வே!
- அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
- அருள் வாமி! அபிராமியே!
(11-வது பாடல், முதல் பதிகம்)