அடுத்த சாட்டை
அடுத்த சாட்டை | |
---|---|
இயக்கம் | எம். அன்பழகன் |
தயாரிப்பு | சமுத்திரக்கனி டாக்டர் பிரபு திலக் |
கதை | எம். அன்பழகன் |
திரைக்கதை | சமுத்திரக்கனி |
இசை | ஜஸ்டின் பிரபாகரன் |
நடிப்பு | சமுத்திரக்கனி தம்பி ராமையா கௌசிக் சுந்தரம் யுவன் அதுல்யா ரவி |
ஒளிப்பதிவு | இராசமதி |
படத்தொகுப்பு | நிர்மல் |
கலையகம் | 11: 11 புரடக்சன்ஸ் நாடோடிகள் |
விநியோகம் | சிறீ வாரி பிலிம் |
வெளியீடு | நவம்பர் 29, 2019 |
ஓட்டம் | 129 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அடுத்த சாட்டை (Adutha Saattai) என்பது இந்தியாவின் தமிழ் மொழியில் 2019இல் வெளிவந்த அதிரடித் திரைப்படமாகும். 2012இல் இயக்குநர் எம். அன்பழகன் இயக்கி வெளியான சாட்டை என்ற படத்தின் தொடர்ச்சியாக இது வெளியானது. இதில், சமுத்திரக்கனியும், தம்பி ராமையாவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, அதுல்யா ரவி, அறிமுக நடிகர் கௌசிக் சுந்தரம், யுவன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். சாட்டை படத்திற்கு இசையமைத்த டி. இமானுக்கு பதிலாக ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். படத்தின் முதன்மை புகைப்படம் 12 திசம்பர் 2018 அன்று தொடங்கியது.[1]
அடுத்த சாட்டை என்பது இந்தியாவில் கல்வி முறையில் நிலவும் குறைபாடுகளைப் பற்றியது.[2] படத்தின் விஷயத்தை கருத்தில் கொண்டு, இது 2019 செப்டம்பரில் உலகளவில் வெளியிட திட்டமிடப்பட்டது [3] பின்னர் நவம்பருக்கு மாற்றப்பட்டது.
நடிகர்கள்
- தயாளனாக சமுத்திரக்கனி
- எம். சிங்கபெருமாளாக தம்பி ராமையா
- பழனிமுத்துவாக யுவன்
- போதும்பொண்ணுவாக அதுல்யா ரவி
- ஆதியாக கௌசிக் சுந்தரம்
- பச்சியம்மாளாக ரஜ்சிறீ பொன்னப்பா
- கோபாலாக ஜியார்ஜ் மார்யன்
- கவிதாலயா கிருஷ்ணன்
- சரவண சக்தி
- சசிகுமார் சிறாப்புத் தோற்றம்
வெளியீடு
இப்படம் 2019 நவம்பரில் உலகளவில் வெளியிடப்பட்டது.[4]
படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை தேன்மொழி தாஸ் மற்றும் யுகபாரதி ஆகிய இருவரும் எழுதியிருந்தனர்.
மேற்கோள்கள்
- ↑ "Samuthirakani starts shooting for Sattai 2". 2018-12-12. https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/samuthirakani-starts-shooting-for-sattai-2.html.
- ↑ "Adutha Saattai teaser out". 21 July 2019. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/adutha-saattai-teaser-out/articleshow/70315189.cms.
- ↑ "Libra Productions to release 'Adutha Saattai' and 'Ayngaran' on Sep 5". 12 August 2019 இம் மூலத்தில் இருந்து 12 ஆகஸ்ட் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190812095715/https://www.sify.com/movies/libra-productions-to-release-adutha-saattai-and-ayngaran-on-sep-5-news-tamil-timsdicjhafcg.html.
- ↑ "Adutha Saatai Info" இம் மூலத்தில் இருந்து 2019-12-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191208203144/http://chennaiboxoffice.com/adutha-saattai-trailer/.