அடாவடி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அடாவடி
இயக்கம்வி. எஸ். பரத் ஹன்னா
தயாரிப்புஜி. சரவணா
ஆர். சேகர்
கதைவி. எஸ். பரத் ஹன்னா (வசனம்)
திரைக்கதைவி. எஸ். பரத் ஹன்னா
இசைதேவா
நடிப்புசத்யராஜ்
ராதா
கஞ்சா கருப்பு
வையாபுரி
டி. பி. கஜேந்திரன்
ஒளிப்பதிவுஆர். ஜூடோ அஸ்வின்
படத்தொகுப்புகே. தங்கவேல்
கலையகம்ஸ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ்
வெளியீடுமார்ச்சு 30, 2007 (2007-03-30)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அடாவடி (Adavadi) வி. எஸ். பரத் ஹன்னா இயக்கத்தில் 2007 ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், ராதா மற்றும் பலர் நடித்திருந்தனர். ஜி. சரவணா மற்றும் ஆர். சேகர் தயாரித்து, தேவா இசை அமைத்த இப்படம், 30 மார்ச் 2007 அன்று வெளியிடப்பட்டது. "" என்ற கன்னட படத்தின் மறு ஆக்கமாகும்.[1]

நடிகர்கள்

  • சத்யராஜ் - பரத்
  • ராதா - சாந்தினி
  • பர்வேஷ்
  • சுஜா வருநீ
  • கஞ்சா கருப்பு
  • Y. Gee. மஹிந்திரா - பரத்தின் தந்தை
  • மலேசியா வாசுதேவன்
  • அலெக்ஸ்
  • வையாபுரி - மைக்கில்
  • சத்யப்ரியா - பரத்தின் தாய்
  • கே. ஆர். வத்சலா - சாந்தினியின் தாய்
  • பாத்திமா பாபு
  • ஷர்மிலி
  • கோவை செந்தில்
  • டெலிபோன் சுப்பிரமணியம்
  • முத்துக்காளை

கதைச்சுருக்கம்

பரத் (சத்யராஜ்) ஒரு கைதேர்ந்த, நேர்த்தியான பட இயக்குனர் ஆவார். முன் கோவ சுபாவம் கொண்டதால், தன்னை சுற்றி இருப்பவர்களை மரியாதை குறைவாகவும், அகந்தையுடனும் நடத்துவார் பரத். அவர் இயக்கும் திரைப்படம் ஒன்றில், சாந்தினி (ராதா) எனும் புதுமுக நடிகை அறிமுகமானார். நாளடைவில், சாந்தினி பரத்தை காதல் செய்தார். அனைவரின் முன்னிலையிலும், தன் காதலை பரத்திடம் வெளிப்படுத்தினாள். அது சற்றும் பிடிக்காத பரத், கோபம் கொண்டு, அனைவரின் முன்னிலையிலும் அவளை கன்னத்தில் அடித்து அவமான படுத்துகிறார். அதில் விரக்தி அடைந்த சாந்தினி, பரத்தை விட்டு விலகி வாழ்ந்து வருகிறார். சாந்தினியை மறக்க முடியாத பரத், குடி போதைக்கு அடிமையாகிறார். பரத்தும் சாந்தினியும் ஒன்று சேர்ந்தார்களா? என்ற கேள்விக்கு விடைகாணுதலே மீதிக் கதையாகும்.

தயாரிப்பு

அடிதடி எனும் வெற்றிப்படத்தை தொடர்ந்து, சத்யராஜுடன் அணி சேர்ந்தார், இயக்குனர் பரத் ஹன்னா. சுந்தரா டிராவல்ஸ் எனும் படத்தில் நடித்த ராதா, இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க தேர்வு செய்யப்பட்டார். தேவா இசை அமைக்க ஒப்பந்தமானார் [2][3]

ஒலிப்பதிவு

ஸ்நேஹன், பிறைசூடன், செந்தில்குமார் எழுதிய பாடல் வரிகளுக்கு தேவா இசை அமைத்தார்.[4][5][6][7]

ட்ராக் பாடல் பாடகர் (கள்) காலம்
1 என் அன்பே கார்த்திக் , மீருனாலினி 5:15
2 இது ஒன் டே மலேசியா மரான் 4:38
3 'திண்டுக்கல் பூட்டு' தேவா , ஸ்ரீ தேவிகா பாரத் 5:25
4 திசை ஸ்ரீராம் பார்த்தசாரதி 4:27

வரவேற்பு

இந்த படம் பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[8][9][10]

மேற்கோள்கள்

  1. "Adavadi (2007) Tamil Movie". spicyonion.com. http://spicyonion.com/movie/adavadi/. பார்த்த நாள்: 2013-12-24. 
  2. "Adavadi — Patented pattern". indiaglitz.com. 2006-11-20 இம் மூலத்தில் இருந்து 2007-01-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070114195116/http://www.indiaglitz.com/channels/tamil/preview/8383.html. பார்த்த நாள்: 2013-12-24. 
  3. "Sathyaraj pays a debt of thanks". indiaglitz.com. 2006-09-20 இம் மூலத்தில் இருந்து 2013-12-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131225154207/http://www.indiaglitz.com/channels/tamil/article/25446.html. பார்த்த நாள்: 2013-12-24. 
  4. "Adavadi Songs". raaga.com. http://www.raaga.com/channels/tamil/album/T0001091.html. பார்த்த நாள்: 2013-12-24. 
  5. "Adaavadi : Tamil Movie". hummaa.com. http://www.hummaa.com/music/album/adaavadi/23722. பார்த்த நாள்: 2013-12-24. 
  6. "MusicIndiaOnline — Adaavadi (2006) Soundtrack". mio.to இம் மூலத்தில் இருந்து 2013-12-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131225170924/http://mio.to/album/29-tamil_soundtracks/5085-Adaavadi__2006_/. பார்த்த நாள்: 2013-12-24. 
  7. "Download Adaavadi". music.ovi.com இம் மூலத்தில் இருந்து 2013-12-24 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20131224213232/http://music.ovi.com/in/en/pc/Product/Various-Artists/Adaavadi/8500824. பார்த்த நாள்: 2013-12-24. 
  8. Settu Shankar (2007-04-20). "Adavadi — Review". entertainment.oneindia.in இம் மூலத்தில் இருந்து 2013-12-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131226041319/http://entertainment.oneindia.in/tamil/reviews/2007/adavadi-review-200407.html. பார்த்த நாள்: 2013-12-24. 
  9. KTL (2007-04-13). "Incredibly hackneyed -- Adaavadi". hindu.com இம் மூலத்தில் இருந்து 2007-04-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070419144313/http://www.hindu.com/fr/2007/04/13/stories/2007041300190200.htm. பார்த்த நாள்: 2013-12-24.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2007-04-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070419144313/http://www.hindu.com/fr/2007/04/13/stories/2007041300190200.htm. 
  10. "Adavadi — More noise". indiaglitz.com. 2007-04-11 இம் மூலத்தில் இருந்து 2007-02-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070219151841/http://www.indiaglitz.com/channels/tamil/review/8383.html. பார்த்த நாள்: 2013-12-24. 
"https://tamilar.wiki/index.php?title=அடாவடி&oldid=29932" இருந்து மீள்விக்கப்பட்டது