அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (Akkaraipattu Muslim Central College) இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் அக்கரைப்பற்று தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள முன்னணி முஸ்லிம் பாடசாலைகளில் ஒன்றாகும். தேசியப் பாடசாலையான இது கலவன் பாடசாலையாகும்.
பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மாணவர்களைக் கருத்திற்கொண்டு இப் பாடசாலை 1948ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இப் பாடசாலை கல்வித்துறையில் தொடர்ச்சியாக பல சாதனைகளை படைத்து வந்துள்ளது. இப் பாடசாலையில் கற்ற பலர் இலங்கையில் சிறந்த கல்விமான்களாகவும், அரசியல் வாதிகளாகவும், சமூகத்தில் மதிக்கத்தக்கவர்களாகவும் உள்ளனர்.
இப் பாடசாலையில் தரம் 1 - 13 வரை வகுப்புகள் உள்ளன. 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். சுமார் 160 ஆசிரியர்கள் இங்கு பணிபுரிகின்றனர். தமிழ்மொழி மூலமாக பிரதான விரிவுரை நடைபெறுகின்றது. ஆங்கில மொழி மூலமாகவும் சில வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.