வேலூர் வசிஷ்டேசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வேலூர் வசிஷ்டேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

இக்கோயில் வேலூர் மாவட்டத்தில் வேப்பூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இவ்வூரில் வேப்ப மரங்கள் நிறைந்திருப்பதால் வேம்பூர் என அழைக்கப்பட்டு, பின்னர் வேப்பூர் என்றானது.[1] கடல் மட்டத்திலிருந்து சுமார் 193 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 12°55'00.0"N, 79°18'11.1"E (அதாவது, 12.916872°N, 79.303079°E) ஆகும்.

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக வசிஷ்டேசுவரர் உள்ளார். சப்த ரிஷிகளில் ஒருவரான வசிஷ்டர் இங்கு தங்கி இங்குள்ள இறைவனை வழிபட்டதால் இவர் வசிஷ்டேசுவரர் என்றழைக்கப்படுகிறார். சிவன் இங்கு வசிஷ்டருக்கு ஜோதி வடிவில் காட்சி தந்ததாகக் கூறுகின்றனர். இறைவி பாலகுஜாம்பிகை ஆவார்.[1]

வரலாறு

இறைவி தனி சன்னதியில் உள்ளார். சிவனின் சன்னதியில் வசிஷ்டர் சிவனை வணங்கிய நிலையில் உள்ளார். இவருக்கு பூசை செய்த பினனர் சிவனுக்கு பூசை செய்கிறார்கள். சரபேசுவரர், சப்த மாதர், செல்வ விநாயகர், காசி விசுவநாதர், அகோர வீரபத்திரர், கால பைரவர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.இக்கோயிலிலுள்ள வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியரைப் போற்றி அருணகிரியார் பாடியுள்ளார்.[1]

விழாக்கள்

சிவராத்திரி, பௌர்ணமி, ஆவணி வளர்பிறை பஞ்சமி உள்ளிட்ட விழாக்கள் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன. மகாளய பட்சம் மற்றும் அமாவாசை போன்ற நாள்களில் இறைவனுக்கு சிறப்பு பூசை நடைபெறுகிறது.

மேற்கோள்கள்