வெங்கனூர் விருத்தகிரீசுவரர் கோயில்
வெங்கனூர் விருத்தகிரீசுவரர் கோயில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
க்க யில் பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை வட்டத்தில் வெங்கனூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக விருத்தகிரீசுவரர் உள்ளார். இறைவி பாலாம்பிகை மற்றும் விருத்தாம்பிகை ஆவார். கோயிலின் மரம் வன்னி ஆகும். மணிமுத்தா நதியின் கிளையான ஸ்வேதா நதி இக்கோயிலின் தீர்த்தமாகும்.[1]
அமைப்பு
கருவறை பிரணவ மந்திரமான ஓம் என்ற வடிவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புவானவர். திருவுருவத்தையும், அருவுருவத்தையும் ஒரே இடத்திலிருந்து தரிசிக்கின்ற வாய்ப்பு உள்ளது. இக்கோயில் ஒலி எழுப்பும் தூண்களைக் கொண்டுள்ளது. சிவப்பிரகாச சுவாமிகள் இக்கோயிலைப் பாடியுள்ளார்.[1]
திருவிழாக்கள்
பிரதோஷம், பௌர்ணமி, சிவராத்திரி, நவராத்திரி, சோமவார உற்சவம், தை பூசம் போன்றவை இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களாகும்.[1]