வில்லிவாக்கம் அகத்தீசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வில்லிவாக்கம் அகத்தீசுவரர் கோயில்
வில்லிவாக்கம் அகத்தீசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
வில்லிவாக்கம் அகத்தீசுவரர் கோயில்
அகத்தீசுவரர் கோயில், வில்லிவாக்கம், தமிழ்நாடு
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை மாவட்டம்
அமைவு:வில்லிவாக்கம்
ஏற்றம்:60 m (197 அடி)
ஆள்கூறுகள்:13°06′19″N 80°12′23″E / 13.105150°N 80.206390°E / 13.105150; 80.206390Coordinates: 13°06′19″N 80°12′23″E / 13.105150°N 80.206390°E / 13.105150; 80.206390
கோயில் தகவல்கள்

அகத்தீசுவரர் கோயில் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் சென்னை வில்லிவாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 60 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வில்லிவாக்கம் அகத்தீசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 13°06′19″N 80°12′23″E / 13.105150°N 80.206390°E / 13.105150; 80.206390 ஆகும்.

இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் (செவ்வாய் தோசம் நீக்கும்) கோயில்களில் ஒன்றாகும்.[2]

அகத்திய முனிவர் சிவலிங்கத்தை பிரதிட்டை செய்து வழிபட்ட தலங்களில் ஒன்றான இக்கோயிலில், பெண்கள் செவ்வாய் கிழமைகளில் பெருந்திரளாக வந்து செல்கின்றனர்.[3]

சுமார் ஐநூறு ஆண்டுகள் தொன்மையான கோயில் என்ற வரலாற்று சிறப்பு மிக்கது இவ்வாலயம்.[4]

இறைவி சொர்ணாம்பிகை சமேத மூலவராக இறைவன் அகத்தீசுவரர் வீற்றிருக்கும் இக்கோயிலின் தீர்த்தம் அங்காரக தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.[5] இந்த தீர்த்தத்தின் கரையில் அங்காரகன் (செவ்வாய்) காட்சியளிப்பதால், 'செவ்வாய் கோயில்' என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.[6]

பொதுவாக, ஒரு கோவிலின் நுழைவாயில் கிழக்கு நோக்கி இருக்கும்; ஆனால் இந்தக் கோவிலின் நுழைவாயில் தெற்கு நோக்கி உள்ளது.[7]

இக்கோயிலின் இறைவன், இறைவியுடன் திருமணக் கோலத்தில் அகத்தியருக்கு காட்சியருளியது ஓர் ஆடி மாதம் செவ்வாய் கிழமை என்று கருதப்படுவதால், ஆடி மாதம் செவ்வாய் அன்று வழிபாடு சிறப்புடையதாகும் என்று நம்பப்படுகிறது.[8]

மேற்கோள்கள்

  1. "ஶ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்" (in British English). பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.
  2. "Arulmigu Agatheeswara Swamy Temple, Villivakkam, Chennai - 600049, Chennai District [TM000317].,Chevvai temple, Angaraka Kshethram". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.
  3. மாலை மலர் (2019-08-06). "சென்னை பெண்களின் மனம் கவர்ந்த செவ்வாய் கோவில்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.
  4. "500 ஆண்டு கால புராதான சிறப்பு மிக்க வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் ஆலய வரலாறு!". www.toptamilnews.com. 2020-07-21. பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.
  5. "Agastheeswarar Temple : Agastheeswarar Agastheeswarar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.
  6. ValaiTamil. "அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.
  7. "Villivakkam Agastheeswarar Temple – Hindu Temple Timings, History, Location, Deity, shlokas" (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.
  8. Suriyakumar Jayabalan. "ஆடி செவ்வாய் வழிபாடு - அருள்மிகு அகத்தீஸ்வரர் கோயில்!". Tamil Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.

வெளி இணைப்புகள்