வடுவூர் கோதண்டராமர் கோயில்
வடுவூர் கோதண்டராமர் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருவாரூர் |
அமைவு: | வடுவூர் |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டடக்கலை |
வடுவூர் கோதண்டராமர் கோயில், தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராமர் கோயிலாகும். பஞ்சராமர் தலங்களில் இதுவும் ஒன்றாகும்.
அமைவிடம்
இக்கோயில் திருவாரூர் மாவட்டத்தில் தஞ்சாவூர்-மன்னார்குடி சாலையில் வடுவூர் என்னுமிடத்தில் உள்ளது. இக்கோயில் தட்சிண அயோத்தி என்றும் அழைக்கப்படுகிறது.[1]
தொன்மம்
வனவாசம் முடிந்து இராமர் அயோத்திக்கு புறப்பட்டபோது, அவரை தரிசித்த முனிவர்கள் அவரை தங்களுடனே தங்குமாறு வேண்டினர். அதனால் இராமர் தன் உருவத்தை சிலையாக செய்து தான் தங்கி இருந்த இடத்தில் வைத்தார். சிலையைக் கண்ட துறவிகள் சிலையை தங்களுடனே வைத்துக்கொள்ள அவரிடம் அனுமதி வேண்டினர். அவர்களிடமே அச்சிலையைக் கொடுத்துவிட்டு இராமர் அயோத்திக்குப் புறப்பட்டார்.[2]
வரலாறு
தஞ்சாவூர் மராத்திய மன்னர் சரபோஜி தலைஞாயிறு என்ற இடத்தில் கண்டெடுத்த சிலையைக் கொண்டு இக்கோயிலை அமைத்தார்.[2]
மூலவர்
மூலவராக கோதண்டராமர் உள்ளார். [1]
பிற சன்னதிகள்
திருச்சுற்றில் ஹயக்ரீவர், விஷ்வஷேனர், ஆண்டாள், ஆழ்வார்கள் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. [1]