மேல்படப்பை தழுவக்கொழுந்தீசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மேல்படப்பை தழுவக்கொழுந்தீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

இக்கோயில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் மேல்படப்பை என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக தழுவக்கொழுந்தீசுவரர் ஆவார். அவரை தழுவக்குழைந்தீசுவரர் என்றும் அழைப்பர். இறைவி காமாட்சி ஆவார். இக்கோயிலின் தல மரம் மாமரம் ஆகும். கோயிலின் தீர்த்தம் சிவபுஷ்கரணி ஆகும். இத்தலம் வழியாக விருத்தாசலம் சென்ற ஞானசம்பந்தர் இத்தலத்தைப் பற்றிப் பாடியுள்ளதால் தேவார வைப்புத்தலமாக இத்தலம் கருதப்படுகிறது.[1]

அமைப்பு

மூன்று நிலை ராஜகோபுரத்தைக் கொண்டு அமைந்துள்ள இக்கோயில் மூலவரின் மீது செப்டம்பர் மாதத்தில் முதல் ஏழு நாள்கள் சூரிய ஒளி விழுவதைக் காணலாம். தல விநாயகர் வெற்றி விநாயகர் என்றழைக்கப்படுகிறார். இறைவி தெற்கு நோக்கிய நிலையில் தனி சன்னதியில் உள்ளார்.இறைவியின் கோஷ்டத்தில் வைஷ்ணவி, லட்சுமி, சரசுவதி ஆகியோர் உள்ளனர். சந்திரன் தட்சனின் 27 மகள்களைத் திருமணம் செய்துகொண்டான். இருந்தபோதிலும் ரோகிணி மீது மட்டும் அதிக அன்பு செலுத்தினான். அதனால் கோபமுற்ற பிற மனைவியர் தம் தந்தையான தட்சனிடம் இது பற்றிக் கூறினர். கோபமடைந்த தட்சன் சந்திரனின் கலைகள் தேயும்படி சபித்தான். சாப விமோசனம் பெற பல கோயில்களுக்குச் சந்திரன் சென்றான். அக்கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.[1]

விழாக்கள்

வைகாசியில் ஞானசம்பந்தர் குருபூசை, ஆடிப்பூரம், நவராத்தி, மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம்உள்ளிட்ட விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன.[1]

மேற்கோள்கள்