மூலங்குடி மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மூலங்குடி மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

இக்கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி அருகில் அமைந்துள்ளது.

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக சுந்தரேசுவரர் உள்ளார். இறைவி மீனாட்சி அம்மன் ஆவார். கோயிலின் மரம் வில்வம் ஆகும். [1]

அமைப்பு

மூலவருக்கு முன்பு காணப்படுகின்ற நந்தியின் பின்புறமாக நின்று கொண்டு இறைவனைக் காணும்போது சிவனின் நெற்றிக்கண் தெரிவது போல காணப்படும். அவ்வாறே முன்புறம் நின்று பார்க்கும்போது வில்வ மரத்தைக் காணமுடியும். வில்வ மரத்தருகே நின்று பார்க்கும்போது மூலவரின் திருமேனியை அழகாகக் காணலாம். இக்கோயிலில் துர்க்கையம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. பொதுவாக அனைத்து சிவன் கோயில்களிலும் துர்க்கையம்மன் சன்னதி சிவபெருமானுக்கு இடது புறம் காணப்படும். ஆனால் இக்கோயிலில் வலப்புறம் அமைந்துள்ளது. இங்குள்ள துர்க்கையம்மன் 18 கரங்களில் ஆயுதங்களை ஏந்திய நிலையில் காணப்படுகிறார். 3 சூலை 2017 அன்று இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.[1] 2016இல் துர்க்கா ஹோமம் இங்கு நடைபெற்றது. [2]

திருவிழாக்கள்

மகா சிவராத்திரி, நவராத்திரி, சித்திரா பௌர்ணமி உள்ளிட்ட பல விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன. [1]

மேற்கோள்கள்

வார்ப்புரு:புதுக்கோட்டை மாவட்ட கோயில்கள்