முள்ளஞ்சேரி செண்பகவல்லி அம்மன் ஆலயம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

செண்பகவல்லி அம்மன் ஆலயம் புரதானமாக நடத்தப் படுவதால் மகிமை மிமுந்த தலமாக உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்னால் மண் சுவற்றில் ஓடுகள் கொண்டு கட்டப் பட்ட கோவில் பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து இடிந்து விழுந்தது. இருந்தாலும் பல ஆண்டுகளாக கண்டு கொள்ளாமல் புதர்கள் நிறைந்து காணப்பட்டது. சரியான ஒருங்கினைப்பும் ஒருங்கிணைப்பவரோடு ஒத்துழைக்க வேண்டும் என்ற உணர்வும் இல்லாததே அதற்குக் காரணம். திருமணங்கள் நல்ல காரியங்கள் நடக்க வேண்டும் என்ற வேண்டுதலுக்காக முட்புதரில் வைத்து படையல் செய்வார்கள்.

2000 ஆண்டில் இதற்கு ஒருவிழா காணவேண்டும். மக்கள் அறியாமையை விலக்கி ஆரோக்கியமான வழிபாட்டு முறையை கொண்டு வந்து முன்னோர்கள் வழிபட்டு வந்த ஆலயத்தை புனரமைக்க ஊர்மக்களைக் கூட்டினார் முள்ளஞ்சேரி மு.வேலையன் அவர் வாக்குக்குக் கட்டுப் பட்டும் மனம் இல்லாமல் ஏற்றுக் கொண்டு இருந்தனர். புதிய முறையில் ஆலயம் எழுப்பி கோழிகள் பலி போன்ற நாகரீக மற்ற செயல்களை கைவிட நம்பிக்கையுட்டி செயல்பட்டார். ஆலயம் எழுப்பப்பட்டது.

ஆகம முறைப்படி வழிபாடுகள் நடத்தப் படுகிறது. வாரம் தோறும் கூடுதல் குடும்ப சங்கம புஜை கூட்டு பிரார்த்தனை பால்குட பவனி போன்றவைகளை அறிமுகப் படுத்தி கல்வி ஆரோக்கியப் பொருளாதார வளர்ச்சி போன்றவைகள் முன் வைத்து நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தார். வுழா நிகழ்ச்சிகள் மக்கள் மேம்பாடு முன் வைத்து நடத்தப்பட்டது.

சில வருடங்களுக்கு பின்னர் பழமை விரும்பிகளும் பதவியென்ற பேய் பிடித்தவர்கள் பிடியில் சிக்கியதால் அதிலிருந்து போராடி அல்லல் பட விரும்பாதலால் அதன் வளர்ச்சி எண்ணங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்து விலகினார். அவர்கள் செயல்களை இடையுறு செய்யாமல் ஆலய பணிகளுக்கு ஆதரவு வழங்கி வருகிறார். அவருடைய சிந்தனை விதைகள் விதைக்கப்பட்டது.

2000த்தில் செண்பகவல்லி அம்மன் ஆலயத்தில் ஏற்படுத்தப் பட்ட மாற்றங்கள் ஸ்ரீகிருஷ்ணன் ஆலயம் உயர்ந்துவளர்வதற்கும் புத்துணர்ச்சியுடன் இளைஞர்கள் செயல்படுவதற்கும் காரணமாக அமைந்தது. அது போன்ற சிந்தனைகள் பல ஆலயங்களின் மாற்றங்களுக்கு உதவின.