முடுக்கங்குளம் அம்பலவாணர் கோயில்
முடுக்கங்குளம் அம்பலவாணர் கோயில் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
இக்கோயில் விருதுநகர் மாவட்டத்தில் முடுக்கங்குளம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1]
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக அம்பலவாணர் உள்ளார். இறைவி சிவகாமசுந்தரி ஆவார். மகாசிவராத்திரி அன்று மூலவர் மீது சூரிய ஒளி விழும் அற்புதமான காட்சியைக் காணலாம். இக்கோயிலின் தீர்த்தம் சிவகாமி புஷ்கரணி ஆகும். கோயிலுக்குள் ஒரு கிணறு உள்ளது. சிவராத்திரி, பிரதோஷம், மார்கழி உள்ளிட்ட விழாக்கள் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன.[1]
வரலாறு
முற்காலப் பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்டதை உறுதி செய்யும் வகையில் கோயிலில் முன் சின்னங்கள் காணப்படுகின்றன. கோயிலின் வாயிலில் உள்ள விநாயகர் கல்யாண விநாயகர் என்றழைக்கப்படுகிறார். அவர் வடக்கு நோக்கி உள்ளார். ராவணன் மனைவி மண்டோதரி தன்னுடைய திருமணத் தடை நீங்குவதற்காக சுக்ராச்சாரியாரிடம் கருத்து கேட்க, அவர் தாமரைகள் நிறைந்த குளத்தினைக் கொண்ட, முடுக்கங்குளம் என்றழைக்கப்படுகின்ற இடத்தில் உள்ள சிவனைத் தரிசித்தால் அவரது விருப்பம் நிறைவேறும் என்றார். அவருடைய திருமணம் சிறப்பாக நடைபெற்ற இடம் என்ற பெருமையை உடைய கோயிலாகும். பலகணி என்னும் கல் ஜன்னல் மூலவர் சன்னதிக்கு முன்பாக உள்ளது.[1]