மதுரை விளக்குத்தூண் நவநீத கிருஷ்ணர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மதுரை விளக்குத்தூண் நவநீத கிருஷ்ணர் கோயில்
மதுரை விளக்குத்தூண் நவநீத கிருஷ்ணர் கோயில் is located in தமிழ் நாடு
மதுரை விளக்குத்தூண் நவநீத கிருஷ்ணர் கோயில்
மதுரை விளக்குத்தூண் நவநீத கிருஷ்ணர் கோயில்
நவநீத கிருஷ்ணர் கோயில், விளக்குத்தூண், மதுரை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்:9°54′48″N 78°07′22″E / 9.913249°N 78.122825°E / 9.913249; 78.122825Coordinates: 9°54′48″N 78°07′22″E / 9.913249°N 78.122825°E / 9.913249; 78.122825
பெயர்
வேறு பெயர்(கள்):தெற்கு கிருஷ்ணன் கோயில்[1]
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:மதுரை மாவட்டம்
அமைவிடம்:பந்தடி ஐந்தாவது தெரு, விளக்குத்தூண், மதுரை
சட்டமன்றத் தொகுதி:மதுரை மத்தி (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:மதுரை மக்களவைத் தொகுதி
ஏற்றம்:184 m (604 அடி)
கோயில் தகவல்
மூலவர்:நவநீத கிருஷ்ணர்
தாயார்:மகாலட்சுமி
சிறப்புத் திருவிழாக்கள்:கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி, விநாயக சதுர்த்தி

மதுரை விளக்குத்தூண் நவநீத கிருஷ்ணர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் மதுரை நகரில் விளக்குத்தூண் பகுதிக்கு அருகில் பந்தடி ஐந்தாவது தெருவில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[2] மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தெற்குப் பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளதால், தெற்கு கிருஷ்ணன் கோயில் என்ற இன்னொரு பெயரும் உண்டு.[3]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 184 மீட்டர் உயரத்தில், 9°54′48″N 78°07′22″E / 9.913249°N 78.122825°E / 9.913249; 78.122825 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, மதுரை விளக்குத்தூண் நவநீத கிருஷ்ணர் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலின் மூலவர் நவநீத கிருஷ்ணர்; தாயார் மகாலட்சுமி ஆவர். இக்கோயிலில் சீனிவாச பெருமாள், அலர்மேல்மங்கை தாயார், மகா கணபதி, கருடாழ்வார், இராமர், சீதை, இலட்சுமணன், ஆஞ்சநேயர், இராகு, கேது, நாகர் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர். கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி, விநாயக சதுர்த்தி ஆகியவை இக்கோயிலில் கொண்டாடப்படும் சில முக்கியமான திருவிழாக்களாகும்.[4]

மேற்கோள்கள்

  1. Suriyakumar Jayabalan. "குழந்தை பாக்கியம் தரும் தெற்கு கிருஷ்ணன் கோயில்!". Tamil Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 2023-08-23.
  2. ValaiTamil. "அருள்மிகு நவநீத கிருஷ்ணர் திருக்கோயில்". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2023-08-23.
  3. இல.சைலபதி (2021-05-28). "வைகை நதிக்கரை ஆலயங்கள் - 19: பங்குனியில் ஆற்றில் இறங்கும் பெருமாள்... கிருஷ்ணன் திருக்கோயில்கள்!". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2023-08-23.
  4. "Navaneethakrishnan Temple : Navaneethakrishnan Navaneethakrishnan Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-23.

வெளி இணைப்புகள்