மதுரை நவநீத கிருஷ்ணன் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மதுரை நவநீத கிருஷ்ணன் கோயில்
மதுரை நவநீத கிருஷ்ணன் கோயில் is located in தமிழ் நாடு
மதுரை நவநீத கிருஷ்ணன் கோயில்
மதுரை நவநீத கிருஷ்ணன் கோயில்
நவநீத கிருஷ்ணன் கோயில், வடக்கு மாசி வீதி, மதுரை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்:9°55′22″N 78°07′02″E / 9.9228°N 78.1173°E / 9.9228; 78.1173Coordinates: 9°55′22″N 78°07′02″E / 9.9228°N 78.1173°E / 9.9228; 78.1173
பெயர்
வேறு பெயர்(கள்):வடக்கு கிருஷ்ணன் கோயில்,
கம்பத்தடி கிருஷ்ணன் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:மதுரை மாவட்டம்
அமைவிடம்:வடக்கு மாசி வீதி, மதுரை
சட்டமன்றத் தொகுதி:மதுரை மத்தி (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:மதுரை மக்களவைத் தொகுதி
ஏற்றம்:191 m (627 அடி)
கோயில் தகவல்
மூலவர்:நவநீத கிருஷ்ணன்
தாயார்:சத்தியபாமா மற்றும் ருக்மணி
சிறப்புத் திருவிழாக்கள்:கிருஷ்ண ஜெயந்தி
வரலாறு
கட்டிய நாள்:நூறு ஆண்டுகள் பழமையானது
அமைத்தவர்:ஆயிரம் வீட்டு யாதவர்கள்

மதுரை நவநீத கிருஷ்ணன் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் மதுரை நகரில் வடக்கு மாசி வீதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1] மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வடபகுதியில் இக்கோயில் அமைந்துள்ளதால் 'வடக்கு கிருஷ்ணன் கோயில்' என்ற இன்னொரு பெயரும் உண்டு.[2] இக்கோயிலில் சுமார் 38 அடி உயரம் கொண்ட, தமிழ்நாட்டிலேயே உயரமான வழுக்கு மரம் அமைத்து, வழுக்கு மரம் ஏறுதல் போட்டி, ஆண்டு தோறும் கிருஷ்ண ஜெயந்தி திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படுகிறது. இக்கோயிலில் நவநீத கிருஷ்ணன் உலா வரும் பூப்பல்லக்கு, ஆசியாவிலேயே நீளமானது என்ற சிறப்பு வாய்ந்தது.[3]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 191 மீட்டர் உயரத்தில், 9°55′22″N 78°07′02″E / 9.9228°N 78.1173°E / 9.9228; 78.1173 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, மதுரை நவநீத கிருஷ்ணன் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலின் மூலவர் நவநீத கிருஷ்ணன் ஆவார். தாயார்கள் சத்தியபாமா மற்றும் ருக்மணி ஆவர். இக்கோயிலில் ஹயக்ரீவர், ஆஞ்சநேயர், காளி அம்மன், நாகர் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலின் இராசிச் சக்கரம் மற்றும் யோக சக்கரம் ஆகியவையும் வணங்கத் தக்கவைகளாகும்.

மேற்கோள்கள்

  1. மாலை மலர் (2021-08-31). "கீர்த்தியைத் தரும் கிருஷ்ணன் கோவில்கள்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-17.
  2. இல.சைலபதி (2021-05-28). "வைகை நதிக்கரை ஆலயங்கள் - 19: பங்குனியில் ஆற்றில் இறங்கும் பெருமாள்... கிருஷ்ணன் திருக்கோயில்கள்!". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2023-08-23.
  3. "Temple : Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-17.

வெளி இணைப்புகள்