பெரியாண்டிச்சி
பெரியாண்டிச்சி என்பது தமிழ்நாட்டில் வன்னியர், செங்குந்தர் முதலியார் உள்ளிட்டப் பிரிவினரால் வழிபடப்படும் குலதெய்வம் ஆகும்.[1]
பிற சமூகத்தைச் சார்ந்த சில பிரிவினரும் இத் தெய்வத்தை வழிபடுகின்றனர். இது ஒரு பெண் தெய்வம் ஆகும். படுக்கை நிலையில் வானத்தைப் பார்த்தவாறு பெண் உருவத்தை மண்ணால் செய்து அதனைப் பெரியாண்டிச்சியாக வழிபடுகின்றனர். மேலும் இத்தெய்வத்தின் கையில் கத்தி, சூலம், கபாலம், உடுக்கை உள்ளன. இத்தெய்வத்திற்கு ஆடு, சேவல், பன்றி ஆகியவற்றைப் பலியிட்டு வழிபடுவது வழக்கம். சேலம் மாவட்டத்திலும்,[2][3] தருமபுரி மாவட்டத்திலும்[4] அதிகமாக பெரியாண்டிச்சி கோயில்கள் உள்ளன. இக் கோயில்கள் பெரும்பாலும் சுடுகாடுகளுக்கு அருகிலேயே அமைந்துள்ளன. இத்தெய்வத்தின் முக்கியமான உருபெற்ற தலம் மேல்மலையனூரில் உள்ளதுவரலாறு
மேற்கோள்கள்
- ↑ "பெரியாண்டவர் - பெரியாண்டிச்சி கோவிலில் ஆடித் திருவிழா" (in English). 2024-11-19. பார்க்கப்பட்ட நாள் 2024-11-19.
- ↑ மலர், மாலை (2024-11-19). "வாழப்பாடி பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் முப்பூஜை திருவிழா". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2024-11-19.
- ↑ https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2023/Mar/01/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-4009901.html
- ↑ "பெரியாண்டிச்சி அம்மன் கோவில் திருவிழா!". தினமலர். 2024-11-19. பார்க்கப்பட்ட நாள் 2024-11-19.