பெரியகளந்தை ஆதீசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பெரியகளந்தை ஆதீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

இக்கோயில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெரியகளந்தை என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக ஆதீசுவரர் உள்ளார். இவர் ஆதிசேசுவரர் என்றும், ஆதிபுரீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி பெரியநாயகி ஆவார். கோயிலின் தல மரம் சந்தனம் ஆகும். கோயிலில் தல தீர்த்தமாக பிரம்ம தீர்த்தம் உள்ளது. ஆனி உத்திரம், ஆடி வெள்ளி, பங்குனி உத்திரம், சிவராத்திரி, நவராத்திரி, கார்த்திகை உள்ளிட்ட பல விழாக்கள் நடைபெறுகின்றன.[1]

அமைப்பு

மூலவர் சுயம்புவாக உள்ளார். மூலவர் கருவறைக்குக் கீழ் சுனை இருப்பதாகக் கூறுகின்றனர். இத்தலத்தைப் பற்றி அருணகிரியார் பாடியுள்ளார். திருச்சுற்றில் சனீசுவரர், ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜர் உள்ளார். தலத்தின் விநாயகர் பால விநாயகர் ஆவார். இந்திரன், சூரியன், பிரம்மா, வாலி, அகத்தியர், பதஞ்சலி மகரிஷி உள்ளிட்டோர் வழிபட்டுள்ளனர்.[1]

மேற்கோள்கள்