புங்கனூர் ஆத்மலிங்கேசுவரர் கோயில்
Jump to navigation
Jump to search
புங்கனூர் ஆத்மலிங்கேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
இக்கோயில் வேலூர் மாவட்டத்தில் புங்கனூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1]
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக ஆத்மலிங்கேசுவரர் உள்ளார். இறைவி உமாமகேசுவரி ஆவார். சிவராத்திரி, பௌர்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட விழாக்கள் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன.[1]
வரலாறு
பாண்டிய நாட்டு அமைச்சரான மாணிக்கவாசகர் குதிரை வாங்குவதற்குச் சென்றார். அப்போது குருந்த மரத்தடியில் இருந்த சிவன் அவரை ஆட்கொண்டார். தன்னிடமிருந்த பொருள்களைக் கொடுத்து ஆத்மநாதருககு திருப்பெருந்துறையில் கோயில் கட்டி வழிபட்டார். அப்பெயரே இத்தலத்து இறைவனுக்கும் உள்ளதால் இக்கோயிலில் உள்ள இறைவனை வழிபட்டால் திருப்பெருந்துறை சென்ற பலன் கிடைக்கும் என்று நம்புகின்றனர். [1]