பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயில்
பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 10°25′05″N 77°29′54″E / 10.4180°N 77.4983°ECoordinates: 10°25′05″N 77°29′54″E / 10.4180°N 77.4983°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திண்டுக்கல் மாவட்டம் |
அமைவிடம்: | பாலசமுத்திரம் |
சட்டமன்றத் தொகுதி: | பழநி (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி: | திண்டுக்கல் மக்களவைத் தொகுதி |
ஏற்றம்: | 378 m (1,240 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | அகோபில வரதராஜ பெருமாள் |
தாயார்: | ஸ்ரீதேவி மற்றும் பூதேவி |
சிறப்புத் திருவிழாக்கள்: | ஆவணி பிரம்மோற்சவம்,[1] சித்ரா பௌர்ணமி, சித்திரை மாதப் பிறப்பு, ஆடிப்பூரம், ஆடி சுவாதி, கோகுலாஷ்டமி, புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திர திருக்கல்யாணம் |
வரலாறு | |
கட்டிய நாள்: | கி. பி. 1504[2] |
அமைத்தவர்: | ஒபுலக்கொண்டம நாயக்கர் |
அகோபில வரதராஜ பெருமாள் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தின் பாலசமுத்திரம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும். இக்கோயிலானது, பழனி முருகன் கோயிலின் ஓர் உபகோயிலாகும்.[3] பழனியிலிருந்து சுமார் ஐந்து கி.மீ. தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் அகோபில வரதராஜ பெருமாள் ஆவார். தாயார்கள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆவர். இக்கோயிலில் கருடாழ்வார், வீர ஆஞ்சநேயர், ஸ்ரீகிருஷ்ணர், ஆண்டாள், சக்கரத்தாழ்வார் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.[4] மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை நினைவூட்டக்கூடிய பழங்கால தசாவதார சிலைகள், பெருந்தேவி தாயார் சன்னதியில் நிறுவப்பட்டுள்ளன.[5]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 378 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 10°25′05″N 77°29′54″E / 10.4180°N 77.4983°E ஆகும்.
ஆவணி பிரம்மோற்சவம்,[6] சித்ரா பௌர்ணமி, சித்திரை மாதப் பிறப்பு, ஆடிப் பூரம், ஆடி சுவாதி, கோகுலாஷ்டமி, புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி,[7] பங்குனி உத்திர திருக்கல்யாணம் ஆகிய திருவிழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.
மேற்கோள்கள்
- ↑ "பாலசமுத்திரம் வரதராஜ பெருமாள் கோயில் ஆவணி பிரம்மோற்சவம் - தேரோட்ட நிகழ்ச்சி கோலாகலம்". Samayam Tamil. பார்க்கப்பட்ட நாள் 2023-08-16.
- ↑ "Agopila Varatharaja Perumal Temple – Hindu Temple Timings, History, Location, Deity, shlokas" (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-08-16.
- ↑ மாலை மலர் (2020-08-28). "பழனி பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவில் பிரமோற்சவ விழா ரத்து". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-16.
- ↑ "Temple : Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-16.
- ↑ Prabhu S (2014-06-27). "Temple, Travel and Sport: Bala Samudram Ahobila Varadaraja Perumal". Temple, Travel and Sport. பார்க்கப்பட்ட நாள் 2023-08-16.
- ↑ தினத்தந்தி (2022-09-04). "அகோபில வரதராஜ பெருமாள் கோவில்: கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆவணி பிரம்மோற்சவ திருவிழா". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-16.
- ↑ "வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு". News J : (in English). 2020-01-06. பார்க்கப்பட்ட நாள் 2023-08-16.
{{cite web}}
: CS1 maint: extra punctuation (link)