பாக்கம் ஆனந்தீசுவரர் கோயில்
பாக்கம் ஆனந்தீசுவரர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 13°08′53″N 80°01′07″E / 13.148055°N 80.018485°ECoordinates: 13°08′53″N 80°01′07″E / 13.148055°N 80.018485°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | அந்தீசுவரர் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருவள்ளூர் மாவட்டம் |
அமைவிடம்: | பாக்கம், திருநின்றவூர் |
சட்டமன்றத் தொகுதி: | பூந்தமல்லி (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி: | திருவள்ளூர் மக்களவைத் தொகுதி |
கோயில் தகவல் | |
மூலவர்: | ஆனந்தீசுவரர் |
குளம்: | அகத்தியர் தீர்த்தம் |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி, திருக்கல்யாணம், திருக்கார்த்திகை, |
உற்சவர்: | ஆனந்தீசுவரர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கல்வெட்டுகள்: | உள்ளன |
பாக்கம் ஆனந்தீசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் திருநின்றவூர் பகுதியின் பாக்கம் (சித்தேரிக்கரை) புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். கி. பி. 1022ஆம் ஆண்டு முதலாம் இராசேந்திர சோழனால் இக்கோயிலுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டதாக கல்வெட்டுகள் காணப்படுகின்றன.[1]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 83 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பாக்கம் ஆனந்தீசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 13°08′53″N 80°01′07″E / 13.148055°N 80.018485°E ஆகும்.
இக்கோயிலில் மூலவர் ஆனந்தீசுவரர் ஆவார். இக்கோயிலின் தலவிருட்சம் ஆலமரம்; தீர்த்தம் அகத்தியர் தீர்த்தமாகும். ஆனந்தீசுவரர், குரு தட்சிணாமூர்த்தி ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர். மகா சிவராத்திரி, திருக்கல்யாணம் மற்றும் திருக்கார்த்திகை ஆகியவை இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
மேற்கோள்கள்
- ↑ "Anandeeswarar (Andheeswarar) Temple : Anandeeswarar (Andheeswarar) Anandeeswarar (Andheeswarar) Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-13.