பழவனக்குடி காசி விசுவநாதர் கோயில்
பழவனக்குடி காசி விசுவநாதர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
இக்கோயில் திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் வட்டத்தில் கொரடாச்சேரி அருகில் அமைந்துள்ளது. இப்பகுதியில் முற்காலத்தில் பழங்களை அதிகமாக விளைவித்ததால் இவ்விடம் பழவனக்குடி என்ற பெயரைப் பெற்றது.[1]
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக காசி விசுவநாதர் உள்ளார். இங்குள்ள இறைவி விசாலாட்சி ஆவார். இங்குள்ள மூலவர் காசியிலிருந்து கொண்டுவரப்பட்டவர் என்று கூறுகின்றனர். காசிக்குச் செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து இறைவனை வணங்கினால் காசிக்குச் சென்ற பலன் கிடைக்கும் என்று நம்புகின்றனர்.[1]
அமைப்பு
இக்கோயிலின் நுழைவாயில் கிழக்குத் திசையில் உள்ளது. திருச்சுற்றில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், பைரவர், துர்க்கையம்மன், சனீசுவரர் ஆகியோர் உள்ளனர். அருகில் சண்டிகேசுவரர் உள்ளார். கோயிலின் எதிரில் குளம் உள்ளது.1968, 2000, 2013 ஆகிய வருடங்களில் இக்கோயிலில் குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளன.சோழ மன்னர்களும், பிற மன்னர்களும் இங்கு வழிபாடு செய்துள்ளனர்.[1]
திருவிழாக்கள்
பிரதோஷம், அமாவாசை, ஆருத்ரா தரிசனம், பங்குனி உத்திரம், தமிழ் வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், மாசி மகம் போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.[1]