பள்ளூர் பரசுராமேசுவரர் கோயில்
பள்ளூர் பரசுராமேசுவரர் கோயில் (பரசுராமேச்சரம்) என்று அறியப்படும் இக்கோயில், காஞ்சிபுரம் அருகிலுள்ள பள்ளூர் சிவன் கோயிலாகும். கச்சியப்ப சிவாச்சாரியார், தான் இயற்றிய காஞ்சி புராணத்தில் இவ்வாலயம், 1500 ஆண்டுகள் தொன்மையானது என்று குறிப்பிட்டுள்ள இத்தல குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது.[1]
இறைவர், வழிபட்டோர்
- இறைவர்: பரசுராமேசுவரர்
- இறைவியார்: ரேனுகா, ஸ்ரீபெருங்கருணைநாயகி
- தல விருட்சம்:
- தீர்த்தம்:
- வழிபட்டோர்: பரசுராமர்.
- பிற சன்னதிகள்: பாலமுருகன், நர்த்தன கணபதி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை (அருகிலுள்ள கோவில்கள்-ஸ்ரீகுகையீச்வரர், ஸ்ரீஅரசாலையம்மன்-வராஹி, ஏழு கன்னிகைகள்)[2]
தல வரலாறு
பரசுராமர் இவ்விறைவனை வழிபட்டு, தாம் எண்ணிவாறு அரசர்களை அழித்து, அக்குருதியினாலேயே தன் தந்தைக்கு தர்ப்பணம் செய்தார் என்பது தல வரலாறாகும்.[3]
அமைவிடம்
தமிழ்நாட்டிலுள்ள வேலூர் மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் வடக்கு எல்லை பகுதியில், காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் உள்ள திருமால்பூரையடுத்துள்ள பள்ளூர் என்னும் கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[4]
மேற்கோள்கள்
- ↑ Project Madurai, 1998-2008 | சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 | 44. பரசிராேமச்சரப் படலம் 1512 - 1573
- ↑ naavaapalanigotrust.com | PALLORE-SIVAN/பள்ளூர்-சிவன்/பரசுராமேஸ்வரம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "shaivam.org | பரசுராமேச்சரம் (பரசுராமேசுவரர்) | தல வரலாறு". Archived from the original on 2015-04-30. பார்க்கப்பட்ட நாள் 2016-02-29.
- ↑ "shaivam.org | காஞ்சி சிவத் தலங்கள் | பரசுராமேச்சரம்". Archived from the original on 2015-04-30. பார்க்கப்பட்ட நாள் 2016-02-29.