நெல்லுக்கடை மாரியம்மன் கோயில்
நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 10°45′40″N 79°50′34″E / 10.761065°N 79.842895°ECoordinates: 10°45′40″N 79°50′34″E / 10.761065°N 79.842895°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | நாகப்பட்டினம் மாவட்டம் |
அமைவிடம்: | நாகப்பட்டினம் |
சட்டமன்றத் தொகுதி: | நாகப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி: | நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி |
ஏற்றம்: | 64 m (210 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | மாரியம்மன் |
சிறப்புத் திருவிழாக்கள்: | செடில் உற்சவம், மார்கழி திருவாதிரை, விநாயகர் சதுர்த்தி, கந்த சஷ்டி, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஓர் அம்மன் கோயில் ஆகும்.[1]
அமைவிடம்
இக்கோயில் நாகப்பட்டினம் நகரில் அமைந்துள்ளது.[2]
மூலவர்
அழகிய இராஜகோபுரத்தையும், உள் திருச்சுற்றையும் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள மூலவர் மாரியம்மன் நான்கு கரங்களைக் கொண்டு அமைந்துள்ளார். சிறந்த பிரார்த்தனைத் தலம் என்ற பெருமையினை இக்கோயில் பெற்றுள்ளது.[2]
செடில் உற்சவம்
ஒவ்வோர் ஆண்டும் இங்கு நடைபெறுகின்ற செடில் உற்சவம் மிகவும் புகழ்பெற்றதாகும்.[3] அவ்விழா சித்திரை மாதத்தில் நடைபெறுகிறது. குழந்தை வரம் வேண்டுகின்றவர்கள் தம் பிரார்த்தனை நிறைவேறியபின்னர் நேர்த்திக்கடனை நிறைவேற்றும்பொருட்டு தங்கள் குழந்தைகளை செடில் உற்சவத்தில் பங்கேற்கவைக்கின்றனர். ஏற்றம் போல அமைந்துள்ள செடிலில் குழந்தைகளைத் தாங்கிய படியானது பூசாரியால் சக்கரம் போல சுழற்றப்படுவதே நேர்த்திக்கடனாகக் கருதப்படுகிறது.[2]
பராமரிப்பு
இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[4]
மேற்கோள்கள்
- ↑ "Temple : Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-31.
- ↑ 2.0 2.1 2.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014
- ↑ பா.கேசவன் (2023-05-10). "நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் செடில் உற்சவம் விநோத வழிபாடு!". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2023-08-31.
- ↑ "Arulmigu Neallukkadai Mariyamman Temple, Nagapattinam Town, Nagappattinam - 611001, Nagapattinam District [TM014723].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-08-31.