நெமிலிச்சேரி அகத்தீசுவரர் கோயில்
நெமிலிச்சேரி அகத்தீசுவரர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 12°56′53″N 80°09′43″E / 12.9480°N 80.1619°ECoordinates: 12°56′53″N 80°09′43″E / 12.9480°N 80.1619°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | செங்கல்பட்டு மாவட்டம் |
அமைவிடம்: | நெமிலிச்சேரி, குரோம்பேட்டை |
சட்டமன்றத் தொகுதி: | பல்லாவரம் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி: | திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி |
ஏற்றம்: | 51 m (167 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | அகத்தீசுவரர் |
தாயார்: | ஆனந்தவல்லி தாயார் |
குளம்: | அகத்திய புஷ்கரணி |
வரலாறு | |
கட்டிய நாள்: | ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானது |
அமைத்தவர்: | குலோத்துங்க சோழன் |
நெமிலிச்சேரி அகத்தீசுவரர் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் குரோம்பேட்டை பகுதிக்கு அருகிலுள்ள நெமிலிச்சேரி புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1][2][3][4]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 51 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நெமிலிச்சேரி அகத்தீசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள் 12°56′53″N 80°09′43″E / 12.9480°N 80.1619°E ஆகும்.
இக்கோயிலின் மூலவர் அகத்தீசுவரர் மற்றும் இறைவி ஆனந்தவல்லி தாயார் ஆவர். இவர்களது சன்னதிகளுடன், சூரியன், சந்திரன் மற்றும் பைரவர் சன்னதி குறிப்பிடத்தக்கவை ஆகும். இக்கோயிலின் தலவிருட்சம் அரசமரம் மற்றும் தீர்த்தம் அகத்திய புஷ்கரணி ஆகும்.[5]
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிற கோயில்களில் திருப்பணிகள் நடக்கவுள்ள 55 கோயில்களில், நெமிலிச்சேரி அகத்தீசுவரர் கோயிலும் ஒன்றாகும்.[6] இக்கோயிலின் குளத்தை செம்மைப்படுத்த, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.[7]
மேற்கோள்கள்
- ↑ "அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
- ↑ Hariprasath (2018-11-24). "நீண்ட கால நோய்கள் இக்கோயிலில் வழிபட்டால் தீரும் தெரியுமா?". Dheivegam. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
- ↑ "நெமிலிச்சேரி அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் அதிரடி மீட்பு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு". m.dinakaran.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
- ↑ Manoj Krishnamoorthi. "Nemilichery Agatheeswarar Temple". Search Around Web. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
- ↑ "Agastheeswarar Temple : Agastheeswarar Agastheeswarar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
- ↑ "55 கோவில்களில் திருப்பணி மேற்கொள்ள ரூ.41 கோடி: குழு அமைத்து பணிகள் துவங்க நடவடிக்கை - Dinamalar Tamil News" (in ta). 2022-05-27. https://m.dinamalar.com/detail.php?id=3039381.
- ↑ "பல கோடி ரூபாயில் மாமல்லை கோவில்கள்...புதுப்பிப்பு!:சுற்றுலா பயணியரை கவர மேம்பாட்டு பணிகள் - Dinamalar Tamil News" (in ta). 2022-05-12. https://m.dinamalar.com/detail.php?id=3028193.