நல்லிச்சேரி ஜம்புநாதசுவாமி கோயில்
நல்லிச்சேரி ஜம்புநாதசுவாமி கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
அய்யம்பேட்டை அருகில் இக்கோயில் அமைந்துள்ளது. நந்திதேவர் வழிபட்டதால் இவ்வூர் நந்திகேசுவரம் என்றழைக்கப்பட்டது. நடுவுச்சேரி என்றும் அழைக்கப்பட்டது. ஊரைச் சுற்றிலும் வயல்கள் நிறைந்த நிலையில் அறுவடையான நெல் இங்கு குவிக்கப்பட்டதால் நெல்லிச்சேரி என்று பெயர் பெற்றது. தற்போது நல்லிச்சேரி ஆக மாறியுள்ளது.[1]
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக ஜம்புநாதசுவாமி உள்ளார். இங்குள்ள இறைவி அலங்காரநாயகி ஆவார்.[1]
அமைப்பு
இக்கோயில்களுக்கு இரு வாயில்கள் உள்ளன. மூலவர் சன்னதிக்கு எதிரேயுள்ள மேற்கு வாசல் எப்போதும் பூட்டிய நிலையில் காணப்படும். இறைவி சன்னதிக்கு எதிரான வாயிலே முதன்மை வாயிலாக உள்ளது. வைஷ்ணதேவி எனப்படும் நல்லிமங்கை வழிபட்ட தலமாகும்.[1]
திருவிழாக்கள்
பிரதோஷம், பௌர்ணமி, சிவராத்திரி சிறப்பான விழாக்களாக இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.[1]