தேவம்பாடி வலசு அமணீசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தேவம்பாடி வலசு அமணீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

இக்கோயில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி வட்டத்தில் தேவம்பாடி வலசு என்னுமிடத்தில் அமைந்துள்ளது. முன்னர் இவ்வூர் தெய்வம்பாடி வலசு என்றழைக்கப்பட்டதாகக் கூறுகின்றனர்.[1]

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக அமணீசுவரர் உள்ளார். பார்வதி மற்றும் கங்கா இத்தலத்தின் இறைவியர் ஆவர். வேம்பு இக்கோயிலின் தல மரமாகும். கோயிலின் தல தீர்த்தமாக கங்கா உள்ளது. மகாசிவராத்திரி உள்ளிட்ட பல விழாக்கள் நடைபெறுகின்றன.[1]

அமைப்பு

புல்வெளிக்கு நடுவில் சிறிய அளவில் இக்கோயில் உள்ளது. கருவறை சுற்றுச்சுவரில் சிலைகள் எதுவுமில்லை. கொடி மரம், பலி பீடம் எவையும் காணப்படவில்லை. மூலவர் எதிரில் நந்தி ருத்ராத்ரட்சத்துடன் காணப்படுகிறது. நவக்கிரகங்கள் உள்ளன. சண்டிகேசுவரர் சிவனுடன் உள்ளார். இத்தல விநாயகர் வேம்பு விநாயகர் என்றழைக்கப்படுகிறார்.[1]

மேற்கோள்கள்