தென் மருதூர் அகஸ்தீஸ்வரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தென் மருதூர் அகஸ்தீஸ்வரர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

இக்கோயில் திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை அருகில் தென்மருதூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக அகஸ்தீஸ்வரர் உள்ளார். இங்குள்ள இறைவி வள்ளிநாயகி ஆவார்.[1]

அமைப்பு

உலகம் சம நிலையைப் பெறுவதற்காக அகத்தியர் வேதாரண்யம் சென்றபோது இங்கு தங்கி சிவபெருமானுக்கு பூசை செய்துள்ளார். அந்நிலையில் இக்கோயில் அகத்தியர் வழிபட்ட பெருமையை உடையது. கோயில் கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. இறைவனும், இறைவியும் தனித்தனியான சன்னதிகளில் உள்ளனர்.திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடி சுப்பிரமணியர் ஆகியோர் உள்ளனர். அருகில் சண்டிகேசுவரர் உள்ளார். தெற்குத் திசையை நோக்கிய நிலையில் தட்சிணாமூர்த்தியும், வடக்கு நோக்கிய நிலையில் பிரம்மாவும் உள்ளனர். இக்கோயிலில் 100 நபர்கள் அமர்கின்ற அளவிற்கு மகாமண்டபம் காணப்படுகிறது.அதிகார நந்தியையும், பலிபீடத்தையும் கோயிலில் காணலாம். 1956, 1996 ஆகிய வருடங்களில் இக்கோயிலில் குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளன.[1]

திருவிழாக்கள்

சிவராத்திரி, பௌர்ணமி, பிரதோஷம், நவராத்திரி, வைகாசி விசாகம் போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்