தீயனூர் ஜமதக்னீஸ்வரர் கோயில்
தேவார வைப்புத் தலம் தீயனூர் ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில்[1] | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | தீயனூர், அக்னீச்சுரம் , மனுகுலகேசரிநல்லூர், சோழ கேரள நல்லூர், வானவன்தேவி சதுர்வேதி மங்கலம்[1] |
பெயர்: | தீயனூர் ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில்[1] |
அமைவிடம் | |
ஊர்: | தீயனூர் (உடையவர் தீயனூர்) |
மாவட்டம்: | அரியலூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | ஜமதக்னீஸ்வரர் |
தாயார்: | அமிர்தாம்பிகை |
தல விருட்சம்: | வில்வம் |
தீர்த்தம்: | அக்னி தீர்த்தம் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கல்வெட்டுகள்: | பல கல்வெட்டுகள் |
தேவார வைப்புத் தலப்பாடல் பாடியவர்கள்: | அப்பர் |
தீயனூர் ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் அமைந்துள்ள சிவபெருமான் திருக்கோயில் ஆகும். பழைமையான தேவார வைப்புத் தலம். [கு 1]
தலவரலாறு
பரசுராமரின் தந்தையான ஜமதக்னி முனிவர் வில்வ மரங்கள் நிறைந்து வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் வந்து சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். இதனால் இத்தல சிவபெருமான் ஜமதக்னீஸ்வரர் என்றழைக்கப்பட்டார்.[1]
கல்வெட்டுகள் மூலம் வரலாறு
கங்கைகொண்ட சோழபுரம் அமைத்த முதலாம் ராஜேந்திர சோழனின் மூத்த மகன் முதலாம் ராஜாதி ராஜன் (1018-1053) ஆட்சிகால கல்வெட்டுகளில் இந்த ஊரின் வரலாற்றுச் சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அரண்மனைகள், அன்னதானக் கூடங்கள் என இவ்வூர் மிகப்பெரிய நகராக அமைந்திருந்ததை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.[1]
கும்பாபிஷேகம்
இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வாகிக்கப்படும் இத்திருக்கோயிலில் 22.05.1968 ஆம் வருடமும் 42 வருடங்களுக்குப் பின்னர் ஊர்மக்கள் மற்றும் வெளியூர் பக்தர்கள் உதவியுடன் மதில்சுவர்கள் பராமரிப்பு பணிகள் முடியுமுன்னர் 8.5.2011 ஞாயிற்றுக்கிழமையும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.[2]
புதிய பைரவர்
இத்திருக்கோயில் முன்பு கவனிப்பாரற்று போக ஆரம்பிக்க இருந்த காலகட்டத்தில் இருந்து வந்த காலபைரவர் சிலை தற்போது காணப்படாததால் 2011 வருட கும்பாபிஷேக சமயம் புதிய பைரவர் சிலை அமைக்கப்பட்டது. பழைமையான காலபைரவர் சிலை திருடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.[2]
குறிப்புகள்
- ↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன் நூலில் (தேவார வைப்புத் தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை) உள்ள 147 தலங்களின் பெயர்களைக் கொண்ட பட்டியலில் இத்தலத்தின் பெயர் காணப்படவில்லை. இது தேவார வைப்புத்தலமா என்பது உறுதி செய்யப்படவேண்டியுள்ளது.