திருவுடையார்பட்டி திருமூலநாதர் கோயில்

திருமூலநாதர் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவுடையார்பட்டியில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். காசிக்கு இணையான பெருமையுடைய தலமாகக் கருதப்படுகிறது. வெள்ளாற்றங்கரையில் தோன்றிய சுயம்புலிங்கத்தின்மீது கி.பி.12ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கோயில் கட்டப்பட்டது. [1]

அமைவிடம்

புதுக்கோட்டை மாவட்டத்தின் திருவரங்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாண்டாக்கோடை ஊராட்சியில் திருவுடையார்பட்டி அமைந்துள்ளது. புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி சாலையில் 7 கிமீ தொலைவில் வாண்டாக்கோட்டையிலிருந்து 2 கிமீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.

இறைவன், இறைவி

இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் திருமூலநாதர், இறைவி திரிபுரசுந்தரி அம்மன்.

பிற சன்னதிகள்

மூலவர், தேவி சன்னதிகளைத் தவிர சொர்ணகால பைரவர், தட்சிணாமூர்த்தி, விநாயகர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. கோயிலுக்கு வெளியே முனீஸ்வரர் காணப்படுகிறார்.

சிறப்பு

இங்கு தைப்பூச நாளில் தீர்த்தவாரி நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறுகிறது. காசிக்குச் சென்றுவருவதற்கு இணையான பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையின் பின்னணியாக அப்பகுதி மக்களால் கதைகள் கூறப்படுகின்றன. [1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 தினமணி புத்தாண்டு மலர் 2013

வெளியிணைப்புகள்

வார்ப்புரு:புதுக்கோட்டை மாவட்ட கோயில்கள்