திருவிடைமருதூர் ரிசிபுரீசுவரர் கோயில்
Jump to navigation
Jump to search
திருவிடைமருதூர் ரிசிபுரீசுவரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
இக்கோயில் திருவிடைமருதூரில் அமைந்துள்ளது.[1]
இறைவன், இறைவி
இங்குள்ள மூலவர் ரிசிபுரீசுவரர் ஆவார். இறைவி ஞானாம்பிகை.[1]
சிறப்பு
பட்டினத்தார், பத்ரகிரியார், வரகுணபாண்டியன், விக்கிரமசோழன் உள்ளிட்டோர் இக்கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளனர். அகத்தியர், காசிபர், கௌதம முனிவர், கௌசிக முனிவர் உள்ளிட்ட பலர் வழிபட்ட கோயிலாகும். இக்கோயிலில் விநாயகர், முருகப்பெருமான், குபேரன்ரே, மகாலட்சுமி, சண்டிகேசுவரர் உள்ளிட்டோர் உள்ளனர். இங்குள்ள நந்திதேவர் செவிகளில் திரவம் வழியும் நிலையில் சிறப்பாகக் கூறப்படுகிறது.[1]
குடமுழுக்கு
4 மார்ச் 2012 அன்று இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.[1]