திருவாமூர் பசுபதீசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
படிமம்:திருவாமூர் பசுபதீஸ்வரர் கோவில்.jpg
திருவாமூர் பசுபதீசுவரர் கோவிலின் உள்தோற்றம்
திருவாமூர் பசுபதீசுவரர் கோயில்
திருவாமூர் பசுபதீசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
திருவாமூர் பசுபதீசுவரர் கோயில்
திருவாமூர் பசுபதீசுவரர் கோயில்
ஆள்கூறுகள்:11°45′58″N 79°28′49″E / 11.7661°N 79.4802°E / 11.7661; 79.4802Coordinates: 11°45′58″N 79°28′49″E / 11.7661°N 79.4802°E / 11.7661; 79.4802
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கடலூர்
அமைவிடம்:திருவாமூர்
சட்டமன்றத் தொகுதி:நெய்வேலி
மக்களவைத் தொகுதி:கடலூர்
ஏற்றம்:64 m (210 அடி)
கோயில் தகவல்
மூலவர்:பசுபதீசுவரர்
தாயார்:திரிபுரசுந்தரி
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி,
பங்குனி ரோகிணி,
சித்திரை சதயம்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

திருவாமூர் பசுபதீசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டிக்கு அருகில் உள்ள திருவாமூர் என்ற ஊரில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.

அமைவிடம்

இக்கோயில் கடலூர் மாவட்டத்தில் திருவாமூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. முன்பு இவ்வூர் திருஆமூர் என்றழைக்கப்பட்டது. இத்தலத்தின் பெருமை சேக்கிழாரின் பெரிய புராணத்தில் காணப்படுகிறது.[1]

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக பதிபதீசுவரர் ஆவார். இறைவி திரிபுரசுந்தரி ஆவார்.கோயிலின் தல மரம் கொன்றை ஆகும். அப்பர் என்றழைக்கப்படுகின்ற நாவுக்கரசர் அவதரித்த பெருமையுடைய தலமாகும்.[1]

அமைப்பு

சில ஊர்க் கோயில்களில் சிவன் ‘திருமுன்பு ‘(சந்நிதி) கிழக்கு நோக்கியும், அம்மன் ‘திருமுன்பு’ தெற்கு நோக்கியும் இருக்கும்; அவற்றுள் இவ்வூரும் ஒன்று.[2] பழமை வாய்ந்த இக்கோயிலின் மூலவருக்கு முன்பாக அப்பர் நின்ற நிலையில் உழவாரத்துடன் காணப்படுகிறார். அருணகிரிநாதர் இக்கோயிலில் உள்ள முருகனைப் பற்றி திருப்புகழில் பாடியுள்ளார். அப்பரின் மூத்த சகோதரியான திலகவதியாருக்கும், தாயாரான மாதினியார், தகப்பனாரான புகழனார் ஆகியோருக்கு தனியாக சன்னதிகள் உள்ளன. திருச்சுற்றிலும் அப்பர் சிற்பம் உள்ளது.[1]

விழாக்கள்

அப்பருக்கு குரு பூசை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்திலும், அவதார நாள் பங்குனி மாதத்திலும் நடைபெறுகிறது.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், தினமலர் கோயில்கள்
  2. புலவர் சுந்தர சண்முகனார் (1993). "கெடிலக் கரை நாகரிகம்". நூல். மெய்யப்பன் தமிழாய்வகம். p. 315. பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2020. {{cite web}}: line feed character in |publisher= at position 11 (help)

வெளி இணைப்புகள்