திருமழிசை ஒத்தாண்டேசுவரர் கோயில்
திருமழிசை ஒத்தாண்டேசுவரர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 13°03′17″N 80°03′42″E / 13.0548°N 80.0618°ECoordinates: 13°03′17″N 80°03′42″E / 13.0548°N 80.0618°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | மன அனுகூல ஈசுவரர் கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருவள்ளூர் மாவட்டம் |
அமைவிடம்: | திருமழிசை |
ஏற்றம்: | 77 m (253 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | ஒத்தாண்டேசுவரர் |
தாயார்: | குளிர்வித்த நாயகி |
குளம்: | தெப்ப தீர்த்தம் |
சிறப்புத் திருவிழாக்கள்: | பிரம்மோற்சவம், கார்த்திகை தீபத் திருவிழா, சனிப்பெயர்ச்சி |
ஒத்தாண்டேசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் திருமழிசை புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 77 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒத்தாண்டேசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 13°03′17″N 80°03′42″E / 13.0548°N 80.0618°E ஆகும்.
இக்கோயிலின் மூலவர் ஒத்தாண்டேசுவரர் மற்றும் தாயார் குளிர்வித்த நாயகி ஆவர். இக்கோயிலின் தலவிருட்சம் வில்வமரம் மற்றும் தீர்த்தம், தெப்ப தீர்த்தம் ஆகும். இக்கோயிலில் கருவறை விமானம், கஜ பிருஷ்ட அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒத்தாண்டேசுவரர், குளிர்வித்த நாயகி, நடராசர், திருமால், விருடப நாயகர், அதிகார நந்தி, பிரதோச நந்தி, தர்ம நந்தி என்று மூன்று நந்திகள், சனீசுவரர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[1]
இக்கோயிலானது, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[2]
மேற்கோள்கள்
- ↑ "Othandeswarar Temple : Othandeswarar Othandeswarar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-07.
- ↑ "Arulmigu Othandeeswarar Temple, Thirumazhisai - 600124, Tiruvallur District [TM001750].,Othandeeswarar,Othandeeswarar". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-08-07.