திருச்சுனை அகத்தீசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
திருச்சுனை அகத்தீசுவரர் கோயில்
திருச்சுனை அகத்தீசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
திருச்சுனை அகத்தீசுவரர் கோயில்
திருச்சுனை அகத்தீசுவரர் கோயில்
அகத்தீசுவரர் கோயில், திருச்சுனை, மதுரை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்:10°10′05″N 78°21′06″E / 10.1680°N 78.3517°E / 10.1680; 78.3517Coordinates: 10°10′05″N 78°21′06″E / 10.1680°N 78.3517°E / 10.1680; 78.3517
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:மதுரை மாவட்டம்
அமைவிடம்:திருச்சுனை
ஏற்றம்:226 m (741 அடி)
கோயில் தகவல்
மூலவர்:அகத்தீசுவரர்
தாயார்:பாடகவள்ளி
குளம்:சுனை தீர்த்தம்
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:கி. பி. 13ஆம் நூற்றாண்டு
அமைத்தவர்:மாறவர்மன் சுந்தரபாண்டியன்[1]

திருச்சுனை அகத்தீசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் திருச்சுனை புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[2][3] அகத்தியர் இக்குன்றிற்கு விசயம் செய்த போது, சிவனை வழிபட நினைத்து, அருகிலுள்ள பாறையில் சுனைநீரைத் தெளித்த போது, அப்பாறைப் பகுதி நெகிழ்வானது. அந்த நெகிழ்ந்த பகுதியை சிவலிங்கமாக வடிவமைத்து, அகத்தியர் வழிபட்டார்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 226 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள திருச்சுனை அகத்தீசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 10°10′05″N 78°21′06″E / 10.1680°N 78.3517°E / 10.1680; 78.3517 ஆகும்.

இக்கோயிலில் மூலவர் அகத்தீசுவரர் மற்றும் தாயார் பாடகவள்ளி ஆவர். அகத்தீசுவரர், பாடகவள்ளி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், லிங்கோத்பவர், சண்டிகேசுவரர், அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர், அகத்தியர், உஷாதேவி சமேத சூரியன் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[4]

மேற்கோள்கள்

  1. செ.சல்மான் பாரிஸ் (2021-11-29). "மதுரை திருச்சுனை அகஸ்தீஸ்வரர் கோயில் ஆச்சர்யம் - 67 ஆண்டுகளாக பாதாள அறையில் இருந்த சாமி சிலைகள்!". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2023-08-12.
  2. மாலை மலர் (2021-11-25). "பழமையான அகத்தீசுவரர் கோவிலில் பாதாள அறையில் சாமி சிலைகள்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-12.
  3. தினத்தந்தி (2021-11-25). "பூட்டை உடைத்து பாதாள அறைைய திறந்து சிலைகளை வெளியே எடுத்த அதிகாரிகள்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-12.
  4. "Agastheeswarar Temple : Agastheeswarar Agastheeswarar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-11.

வெளி இணைப்புகள்