திண்டிவனம் இலட்சுமி நரசிம்மர் கோவில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஸ்ரீ இலட்சுமி நரசிம்மர் திருக்கோவில்
பெயர்
பெயர்:ஸ்ரீ இலட்சுமி நரசிம்மர் திருக்கோவில்
ஆங்கிலம்:Sri kanagavalli Thayar Sametha Sri Lakshmi Narasimhar Swamy
அமைவிடம்
மாவட்டம்:விழுப்புரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஸ்ரீ இலட்சுமி நரசிம்மர் (திருமனிதகோளரிநாதர்)
உற்சவர்:ஸ்ரீ வரதராஜர்
தாயார்:ஸ்ரீ கனகவல்லி தாயார்(திருபொற்மகள் அன்னை)
உற்சவர் தாயார்:ஸ்ரீதேவி பூதேவி சமேத அருள்மிகு ஸ்ரீ வரதராஐர்
தல விருட்சம்:புளிய மரம்
தீர்த்தம்:சுவாமி புஷ்கரிணி
ஆகமம்:வைகானஸம்
சிறப்பு திருவிழாக்கள்:ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி விழா, வைகாசி மாத பிரமோற்சவம் பெருவிழா போனற விழாகள் சிறப்பாக நடைபெறுகிறது.
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டடக்கலை
வரலாறு
தொன்மை:இரண்டாயிரம் மேல் பழமை வாய்ந்தது.
கோயில் அறக்கட்டளை:இந்து சமய அறநிலை.

திண்டிவனம் அருள்மிகு ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத ஸ்ரீ இலட்சுமி நரசிம்மர் சுவாமி திருக்கோவில் இந்தியாவில். தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தின். திண்டிவனம் மாநகரில் மத்தியில் அமையப் பெற்றுள்ளது.

திருக்கோவில் சிறப்பு

திருமகள் நரசிம்மரின் இடத்தொடையில் அமர்ந்த படி தன் இரு கரங்கள் கூப்பி இறைவனை வழிபடுகிறார். இங்கு அனுமன் சங்கு சக்கரம் தாங்கிய வண்ணம் காட்சியளிக்கிறார்.

சிறப்புத் திருவிழாக்கள்:

நரசிம்ம ஜெயந்தி, வைகாசி மாத முழுமுதற்பெருவிழா (பிரமோற்சவம்)

வரலாறு

புளிக்குடிலில் (திந்திரீவனத்தில்) திண்டி, முண்டி, கிங்கிலி, கிலாலி ஆகிய அசுரர்கள் இவ்வனத்தில் தவம் செய்யும் முனிவர்களுக்கு ஓயாது கொடுங்செயல் செய்தமையால் முனிவர்கள் ஸ்ரீ இலட்சுமி நரசிம்மரை வழிபட இறைவன் அனுமனுக்கு சங்கு சக்கரம் அளித்து அழித்தொழிக்க ஆணையிட்டார். அதன்படி அனுமன் போரில் வென்றார், ஆகையால் இக்கோவிலில் அனுமன் சங்கு சக்கரம் தாங்கிய வண்ணம் எழுந்தருளியுள்ளார்.

கோயில் அமைப்பு

கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம். கனகவல்லி தாயார், கோதண்ட ராமர், இலட்சுமி ஹயகிரீவர், விஷ்ணுதுர்கை, வேணுகோபால், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் திண்டிவனம் முதன்மைப் பெரிய திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் திண்டிவனம் வட்ட இந்துசமய அறநிலையத்துறையின் தலைமை கோவிலாக விளங்குகிறது.

மேற்கோள்கள்

  • த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதி