தாமல் வராகீசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
காஞ்சிபுரம் வராகேசம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் வராகேசம்.
அமைவிடம்
ஊர்:தாமல்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வராகீஸ்வரர்.
தாயார்:கவுரீஸ்வரி உடனுறை, வராகீஸ்வரர்.[1]
வரலாறு
தொன்மை:கி.மு. ஐந்நூறு ஆண்டுகட்கு முந்தையது.

தாமல் வராகீசுவரர் கோயில் (வராகேசம்) என போற்றப்படும் இது, காஞ்சி மாவட்டத்திலுள்ள "தாமல்" கிராமத்தின் சிவக் கோயில்களில் ஒன்றாகும். மேலும், இத்திருக்கோயில் மிக மிகப் தொன்மையான கி.மு. ஐந்நூறு ஆண்டுகட்கு முந்தையது என்று சொல்லப்படுகிறது, மற்றும் இக்கோவில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[2]

இறைவர், வழிபட்டோர்

  • இறைவர்: வராகீஸ்வரர்.
  • தொன்மை: கி.மு. ஐந்நூறு ஆண்டுகட்கு முந்தையது.
  • வழிபட்டோர்: திருமால்

தல வரலாறு

இரணியாட்சன் என்பவன் பூமியைச் சுருட்டிக்கொண்டு, பாதாளத்தில் போய்ஒளிந்து கொண்டான். திருமால் வராக (பன்றி) உருக்கொண்டு, இரணியாட்சனை அழித்து பூமியை நிலைபெறச் செய்தார். இதனால் திருமால் செருக்குற்றார். சிவபெருமான் வேடன் வடிவு கொண்டு செருக்குக் கொண்டிருந்த அவ்வராகத்தை அழித்து அதன் கொம்பை தன் மார்பில் அணியாக அணிந்து கொண்டார். தவறையுணர்ந்த திருமால் காஞ்சிக்கு வந்து இறைவனை பிழைப் பொறுத்தருள வேண்டி நின்றார் என்பது வரலாறு.

அமைவிடம்

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் மேற்குப் பகுதியில் தாமல் என்னும் கிராம குளத்தின் தென்கரையில் இக்கோவில் தாபிக்கப்பட்டள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் மேற்கு திசையில், சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருப்புட்குழி மணிகண்டீசுவரர் கோயிலை ஒரு கிலோமீட்டர் கடந்தால் இக்கோயிலை அடையலாம்.

மேற்கோள்கள்

  1. dinamalar.com | தாமல் வராகீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
  2. "shaivam.org | வராகேசம் வராகீஸ்வரர் திருக்கோவில்". Archived from the original on 2018-02-06. பார்க்கப்பட்ட நாள் 2016-03-18.

புற இணைப்புகள்

வார்ப்புரு:காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்