சோழவந்தான் ஆதிவால குருநாதசாமி கோயில்
சோழவந்தான் ஆதிவால குருநாதசாமி கோயில் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
இக்கோயில் மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் என்னுமிடத்தில் வாடிப்பட்டத்தில் மேல வீதியில் ஜனகை நகரில் அமைந்துள்ளது.[1]
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக ஆதிவால குருசாமி உள்ளார். இறைவி அங்காளேசுவரி ஆவார். இருவரும் சுயம்புவாகத் தோன்றியதாகக் கூறுவர். வில்வம், நாகலிங்க மரம் கோயிலின் தல மரங்களாக உள்ளன.[1]
அமைப்பு
முன் கோபுரம் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளது. முன் மண்டபத்தில் தூண்களும் ஓவியங்களும் உள்ளன. கருவறையின் இடப்புறம் அம்மனும், வலப்புறம் முருகனும் உள்ளனர். மகாமண்டபத்தில் மாயாண்டி சுவாமி, வீரபத்திரர், இடது புறத்தில் முத்துப்பேச்சியம்மன், பேச்சியம்மாள், சப்பாணி, பெரிய கருப்பண்ணசாமி, மதுரை வீரன், சோணைசாமி, வீராயியம்மாள், ராக்காயி, சந்தன கருப்பன் பாதாள அம்மன் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. நந்தீசுவரர், லாட சன்னாசி ஆகியோரும் உள்ளனர். அருகே பலி பீடம் உள்ளது. அம்மன் சன்னதியைச் சுற்றி 22 சுவாமிகள் உள்ளனர். [1]
திருவிழாக்கள்
மகா சிவராத்திரி, ஆடி மாதம் விளக்கு பூசை, தைப் பொங்கல், தீபாவளி, நவராத்திரி, பௌர்ணமி ஆகிய நாட்களில் விழாக்கள் நடத்தப்படுகின்றன.[1]