செவலூர் பூமிநாதர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

செவலூர் பூமிநாதர் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

இக்கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் செவலூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. [1]

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக பூமிநாதர் உள்ளார். லிங்கத் திருமேனி பல பட்டைகளைக் கொண்டு அமைந்துள்ளது. பூமாதேவி இந்த லிங்கத்தை ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு முறையில் பலவித காப்புகளைப் பூசி பூசித்துள்ளார். முதல் யுகமான கிருத யுகத்தில் தவமிருந்த தேவி அனைத்து யுகங்களிலும் பூமியின் பாரத்தைத் தாங்குகின்ற சக்தி வேண்டுமென்று கோரினாள். அப்போது இறைவன் பிற யுகங்களில் அவளது விருப்பம் நிறைவேறும் என்று கூறி, கலி யுகத்தில் அத்தகைய சக்தி பெறுவதற்கு பக்தர்களால் அவள் பூசிக்கப்படவேண்டும் என்றும் அதற்கு நாராயணனின் அருள் வேண்டும் என்றும் கூறினார். அவ்வாறான பக்தர்களைத் தேடி தேவி பல இடங்களுக்குச் சென்று, ஆங்காங்கே காணப்பட்ட பல சுயம்புமூர்த்திகளை தரிசித்தாள். அவ்வாறான மூர்த்திகள் பூலோக நாதர் என்றும் பூமி நாதர் என்றும் அழைக்கப்பட்டனர். அவ்வகையில் அமைந்தவரே இந்த பூமிநாதர் ஆவார். இங்குள்ள இறைவி ஆரணவல்லி ஆவார். கோயில் குளம் பிரத்வி தீர்த்தம் எனப்படுகிறது. [1]

அமைப்பு

இத்தலம் மகாவிஷ்ணுவால் உருவாக்கப்பட்ட தலம் என்ற பெருமையையுடையது. இங்குள்ள லட்சுமி நரசிம்மர் மீது எல்லா நாட்களும் சூரிய ஒளி படுவதைப்போன்று கருவறை அமைந்துள்ளது சிறப்பாகும். [1]

திருவிழாக்கள்

சிவராத்திரி, பங்குனி உத்திரம், கார்த்திகை, மார்கழி திருவாதிரை இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்ற விழாக்களாகும். [1]

மேற்கோள்கள்

வார்ப்புரு:புதுக்கோட்டை மாவட்ட கோயில்கள்