சீர்காழி விடங்கேசுவரர் கோயில்
சீர்காழி விடங்கேசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
இக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி வட்டத்தில் தில்லைவிடங்கன் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இறைவன் பெயரான விடகேசுவரரும், இறைவி பெயரான தில்லைநாயகியும் இணைந்து தில்லைவிடங்கன் என்று அழைக்கப்படுவது இவ்வூரின் சிறப்பாகும்.[1]
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக விடங்கேசுவரர் உள்ளார். இங்குள்ள இறைவி தில்லைநாயகி ஆவார். சந்திரன் இங்குள்ள இறைவனை வழிபட்டுள்ளார்.அருள் பாலிக்கின்ற இறைவன் பெயரில் ஊர்கள் பல இடங்களில் தமிழ்நாட்டில் காணப்படுகின்றன. அவ்வகையில் இவ்வூரும் அந்த பெருமையினைப் பெறுகிறது.[1]
அமைப்பு
கோயில் கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. முகப்பைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடமும், நந்தியும் காணப்படுகின்றன. மகாமண்டபத்தில் சந்திரன் உள்ளார். திருச்சுற்றில் மேற்கில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் உள்ளனர். தேவக்கோட்டத்தில் தென் திசையில் தட்சிணாமூர்த்தியும், வட திசையில் துர்க்கையும் உள்ளனர்.அருகில் சண்டிகேசுவரர் உள்ளார். கோயிலின் அருகே குளம் காணப்படுகிறது. கோயிலில் உள்ள விநாயகர் மேற்கு நோக்கிய நிலையில் காணப்படுகிறார். [1]
திருவிழாக்கள்
பிரதோஷம், சித்திரை முதல் நாள், பொங்கல், மார்கழியின் அனைத்து நாள்கள், சோம வாரங்கள் போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.[1]